ஷூட் ரூமில் சரக்கு பார்ட்டி.. கால்கடுக்க நிற்க வைத்த பிரபலம் வளர்ந்து வன்மத்தை தீர்த்த அஜித் - சம்பவம் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஷூட் ரூமில் சரக்கு பார்ட்டி.. கால்கடுக்க நிற்க வைத்த பிரபலம் வளர்ந்து வன்மத்தை தீர்த்த அஜித் - சம்பவம் தெரியுமா?

ஷூட் ரூமில் சரக்கு பார்ட்டி.. கால்கடுக்க நிற்க வைத்த பிரபலம் வளர்ந்து வன்மத்தை தீர்த்த அஜித் - சம்பவம் தெரியுமா?

Nov 21, 2024 06:00 AM IST Kalyani Pandiyan S
Nov 21, 2024 06:00 AM , IST

அஜித்திற்கு கோபம் கொப்பளித்தது. இதனையடுத்து சேரில் இருந்து வேகமாக எழுந்த அஜித் கோபத்தை வெளிக்காட்டாமல் தன்னிடம் இருந்த பொக்கேவை அந்த உதவி இயக்குனரிடம் கொடுத்துவிட்டு, “ஒன் டே வில் கம்” என்று கூறிவிட்டு வேகமாக நடந்த அந்த ஹோட்டலை விட்டு சென்றார்.

90களில் பிரபலமாக இருந்த இயக்குநர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போன அஜித்தை அவர் அவமானப்படுத்தியது தொடர்பாகவும், அதற்கு அஜித் கொடுத்த பதிலடி குறித்தும் மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசி இருக்கிறார்ஷூட் ரூமுக்குள் பார்ட்டிஇது குறித்து அவர் பேசும் போது, “இந்த சம்பவம் 1995 ஆம் ஆண்டில் நடந்தது. அந்த காலத்தில் மிகவும் பிரபலமான இயக்குநர் ஒருவரின் பிறந்தநாள் விழா, ஹோட்டல் ஒன்றில் நடந்தது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அஜித்தும் பொக்கே உடன் வந்திருந்தார். அப்போது அந்த இயக்குநர் ஹோட்டலில் இருந்த ஷூட்ரூமில் அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர்கள், நடிகர்கள் இசையமைப்பாளர்கள் உடன் பார்ட்டி செய்து கொண்டிருந்தார். 

(1 / 6)

இதனையடுத்து அங்கு சென்ற அஜித், அந்த இயக்குநரின் உதவியாளரை அழைத்து, தான் வந்திருப்பதாக இயக்குநரிடம் சொல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து அந்த உதவி இயக்குநர் அஜித்தை உட்கார வைத்துவிட்டு, அந்த செய்தியை இயக்குனரிடம் சொல்வதற்காக ரூமுக்குள் சென்றார். ஆனால், உள்ளே சென்ற உதவி இயக்குநர் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக வெளியே வரவே இல்லை.  

(2 / 6)

ஒரு கட்டத்தில் அவர் வெளியே வந்தார். அப்போது அவரை அழைத்த அஜித் சார், நான் வந்தேன் என்று சாரிடம் சொன்னீர்களா அதற்கு அவர் என்ன சொன்னார் என்று கேட்டார். அதற்கு அந்த உதவி இயக்குநர், நீங்கள் வந்திருப்பதை நான் இயக்குனரிடம் சொல்லி விட்டேன்; இருப்பினும் இன்னொரு முறை அவருக்கு ஞாபகப்படுத்துகிறேன் என்று கூறி மீண்டும் ரூமுக்குள் சென்றார். 

(3 / 6)

பார்க்க முடியாதுஇரண்டு நிமிடத்தில் வெளியே வந்த அந்த உதவியாளர், அஜித்திடம் சார் இப்போது பிஸியாக இருக்கிறாராம்; அதனால் இன்னொரு நாளில் உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லச் சொன்னார் என்று கூறினார். இதைக்கேட்ட அஜித்திற்கு கோபம் கொப்பளித்தது.இதனையடுத்து சேரில் இருந்து வேகமாக எழுந்த அஜித் கோபத்தை வெளிக்காட்டாமல் தன்னிடம் இருந்த பொக்கேவை அந்த உதவி இயக்குனரிடம் கொடுத்துவிட்டு, “ஒன் டே வில் கம்” என்று கூறிவிட்டு வேகமாக நடந்த அந்த ஹோட்டலை விட்டு சென்றார்.

(4 / 6)

பின்னாளில் அஜித் சார் மிகப்பெரிய உயரத்தை அடைந்தார். அப்போது அந்த பிரபல இயக்குநர் அஜித்தை வைத்து படம் செய்ய அவ்வளவு முயற்சிகளைச் செய்தார். 

(5 / 6)

ஆனால், கடைசி வரை அந்த இயக்குநரை அவர் பக்கத்தில் சேர்க்கவே இல்லை. அதுதான் அஜித் உடைய குணம்” என்று பேசினார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்