LK Advani: எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருதை நேரில் வழங்கினார் குடியரசுத் தலைவர் முர்மு
மூத்த அரசியல் தலைவர் எல்.கே.அத்வானி பாரத ரத்னா விருது பெறுவது சிறப்பு வாய்ந்தது என்றும், தேசத்திற்கு அவர் செய்த நீடித்த பங்களிப்புகளை அங்கீகரித்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.
(1 / 6)
முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். (ANI)
(2 / 6)
இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அத்வானியின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். (ANI)
(3 / 6)
அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்த நிலையில், அவருக்கு அருகில் பிரதமர் மோடி அமர்ந்திருந்தார். (X)
(4 / 6)
"பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் நவீன இந்தியாவை வடிவமைப்பதில் அவரது முக்கிய பங்கு நமது வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக அவருடன் மிக நெருக்கமாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் நான் பெருமைப்படுகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். (X)
(5 / 6)
அத்வானியை இந்திய அரசியலின் முன்னோடி என்று வர்ணித்தது குடியரசுத் தலைவர் மாளிகை, அவர் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தனித்துவத்துடன் தேசத்திற்கு சேவை செய்துள்ளார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை கூறியது.(ANI)
மற்ற கேலரிக்கள்