Prashant Kishore: ’2026 தேர்தல் தவெக வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்!’ புஸ்ஸி ஆனந்திடம் PK தந்த ரிப்போர்ட்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Prashant Kishore: ’2026 தேர்தல் தவெக வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்!’ புஸ்ஸி ஆனந்திடம் Pk தந்த ரிப்போர்ட்!

Prashant Kishore: ’2026 தேர்தல் தவெக வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்!’ புஸ்ஸி ஆனந்திடம் PK தந்த ரிப்போர்ட்!

Published Feb 11, 2025 04:47 PM IST Kathiravan V
Published Feb 11, 2025 04:47 PM IST

  • Prashant Kishore: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு ஒப்பந்தம் இல்லாமல், நட்பு அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15 முதல் 20 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ளதாக முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

(1 / 8)

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகம் செய்து வருகிறது. தவெக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு மாவட்டம் தோறும் கட்சி பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

(2 / 8)

முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் என்ற அரசியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பிரசாந்த் கிஷோர் நேற்றைய தினம் சென்னை வந்தார். பனையூரில் உள்ள தவெக அலுவகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை மேற்கொண்டார். 

(3 / 8)

(Pappi Sharma/ANI)

இந்த சந்திப்பை தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தேர்தல் வியூகம் தொடர்பான ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் அளித்ததாக கூறப்பட்டது. 

(4 / 8)

இரண்டாம் நாளான இன்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோரிடம் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தி உள்ளார். ஆதவ் அர்ஜூனாவின் இல்லத்தில் நடைபெற இந்த சந்திப்பில் தவெக அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

(5 / 8)

இந்த சந்திப்பின் போது விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு 15 முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் உள்ளது குறித்த ஆய்வறிக்கையை பிரசாந்த் கிஷோர் வழங்கி உள்ளார். 

(6 / 8)

மேலும் அடுத்தாண்டு நடைபெற உள்ள 2026 தேர்தலில் எவ்வாறு பணியாற்றினால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். 

(7 / 8)

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு ஒப்பந்தம் இல்லாமல், நட்பு அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

(8 / 8)

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.

மற்ற கேலரிக்கள்