Prabhu Deva: பெயரால் வந்த பிரச்னை.. எவ்வளவு சொல்லியும் ஹிட் பட வாய்ப்பில் நடிக்க மறுத்த பிரபு தேவா
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Prabhu Deva: பெயரால் வந்த பிரச்னை.. எவ்வளவு சொல்லியும் ஹிட் பட வாய்ப்பில் நடிக்க மறுத்த பிரபு தேவா

Prabhu Deva: பெயரால் வந்த பிரச்னை.. எவ்வளவு சொல்லியும் ஹிட் பட வாய்ப்பில் நடிக்க மறுத்த பிரபு தேவா

Published Jul 14, 2024 08:10 PM IST Aarthi Balaji
Published Jul 14, 2024 08:10 PM IST

சொல்லாமலே படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபு தேவா. ஆனால் அவர் படத்தில் இருந்து விலகி இருக்கிறார். அதற்கான காரணத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறி உள்ளார்.

" இயக்குநர் சசி என்னிடம் சொல்லாமலே பட கதை சொன்னவுடன் எனக்கு பிடித்து போனது. உடனே பிரபு தேவாவிடம் கதை சொல்லப்பட்டது. அவரும் கதையை கேட்டுவிட்டு, சூப்பராக இருக்கிறது உடனே நாம் செய்துவிடலாம் என சொன்னார்.

(1 / 4)

பட போஸ்டரை கவிதை என்ற பெயரில் தயார் செய்து, அதற்கு மேல் அவரின் பெயரும் கீழே எனது பெயரும் போட்டு இருந்தார். சரி ஆசையில் போட்டு இருக்கிறான் என்று நான் ஒன்றும் சொல்லவில்லை.

(2 / 4)

அதை எடுத்து கொண்டு பிரபு தேவாவிடம் காண்பித்தவுடன் உடனே எனக்கு போன் செய்துவிட்டார். சார்.. 'வளர்வதற்கு முன்பே அவர் பெயரை மேலே போடுகிறார்.. வளர்ந்தால் என்ன செய்வாரோ? இவர் வேண்டாம்..’ என சொல்கிறார். பரவாயில்லை என நான் எத்தனையோ முறை அவரை சமாதனம் செய்ய முயற்சி செய்தேன். வேண்டாம் நான் படம் பண்ணவே மாட்டேன் என்று பிரபு தேவா விலகி கொண்டார். 

(3 / 4)

நான் பிரபு தேவா, ஐஸ்வர்யா ராய் செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். இதற்காக நிறைய செலவு செய்தேன். ஒரு நாள் ஆர். பி. சௌத்ரி செய்தால் நன்றாக இருக்கும் என சசி சொன்னார். நான் ஒன்றுமே சொல்லவில்லை. இந்த படம் ஹிட்டாகும், நல்லா வருவாய் என சொல்லி வாழ்த்தினேன் " என்றார். 

(4 / 4)

மற்ற கேலரிக்கள்