6 மாதத்தில் முடிந்த 10 ஆண்டு கலைப் பயணம்.. சீரியல் நடிகர் நேத்ரனின் கசப்பான கடைசி நாட்கள்!
- 10 ஆண்டுகளாக சின்னத்திரையில் கோலோச்சி வந்த பிரபல நடிகர் நேத்ரன், புற்றுநோயால் காலமானார். அவரின் பயணம், மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை இதோ!
- 10 ஆண்டுகளாக சின்னத்திரையில் கோலோச்சி வந்த பிரபல நடிகர் நேத்ரன், புற்றுநோயால் காலமானார். அவரின் பயணம், மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை இதோ!
(1 / 7)
தமிழ் தொலைக்காட்சிகளான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியான பல சீரியல்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நேத்ரன்.
(2 / 7)
இவர் சமீபத்தில் விஜய் டிவியில் வெளியாகி வரும் பொன்னி சீரியலில் கடைசியாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென அவரது காதாப்பாத்திரம் வீட்டை விட்டு வெளியேறுவதாக காட்டப்பட்டது. பாக்யலட்சுமி சீரியலிலும் அதே நிலையே தொடர்ந்தது.
(3 / 7)
அதன் பின் தான், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் தான் நேத்ரன் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமயத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்தது
(4 / 7)
இவர், தன்னுடன் சீரியலில் நடித்துவந்த தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என இரண்டு பெண்கள் உள்ளனர். இவர்களில் அபிநயா சீரியல் நடிகையான நிலையில், மற்றொருவர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
(5 / 7)
நேத்ரனின் முழுப் பெயர் யுவன்ராஜ் நேத்ரன். இவர் சுமார் 10 ஆண்டுகளாக சின்னத்திரையில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். நேத்ரன் மருதாணி எனும் சீரியலில் நடித்து பிரபலமானார். இவர் சீரியல்களில் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துவந்த இவர், மஸ்தானா மஸ்தானா எனும் சன் டிவியின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆனார்.
(6 / 7)
அதுமட்டுமின்றி இவர் விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 சீசன் 3 மற்றும் 5ல் பங்கேற்றார். பொன்னி சீரியலில் நடித்த சமயத்தில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றார். குடும்பம் முழுவதும் சினிமாவை ஒட்டி இருப்பதால் இவர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றனர்.
மற்ற கேலரிக்கள்