Pooja Hegde:ஒரு நல்ல நடிகருடன் பணிபுரிவது எளிது; ஏனென்றால் நீங்கள் அவர்களுக்கு ரியாக்ட் மட்டும் செய்வீர்கள்: பூஜா ஹெக்டே
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pooja Hegde:ஒரு நல்ல நடிகருடன் பணிபுரிவது எளிது; ஏனென்றால் நீங்கள் அவர்களுக்கு ரியாக்ட் மட்டும் செய்வீர்கள்: பூஜா ஹெக்டே

Pooja Hegde:ஒரு நல்ல நடிகருடன் பணிபுரிவது எளிது; ஏனென்றால் நீங்கள் அவர்களுக்கு ரியாக்ட் மட்டும் செய்வீர்கள்: பூஜா ஹெக்டே

Jan 30, 2025 04:54 PM IST Marimuthu M
Jan 30, 2025 04:54 PM , IST

  • நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் நடித்திருக்கும் பாலிவுட் படமான தேவா படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 

தேவா என்கிற இந்தி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பிரதான நடிகையான பூஜா ஹெக்டே படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.  அதில், "எனக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டபோது, நானும் வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்பிய மனநிலையில் இருந்தேன். அது ஒரு நடிகையாக நான் வரையறுக்கப்படும் விதத்தை மாற்றும்’’ என்றார். 

(1 / 6)

‘’'தென்னிந்திய சினிமாவில் நான் என்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், இந்தி பார்வையாளர்கள் என்னைப்போன்ற கசப்பான பக்கத்தைப் பார்த்திருக்கமாட்டார்கள்.இந்த தேவா படத்தில், என் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது; மனதில் பட்டதைச் சொல்ல பயப்படாத கதாபாத்திரமாக இருந்தது'' என நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார். 

(2 / 6)

‘’'தென்னிந்திய சினிமாவில் நான் என்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், இந்தி பார்வையாளர்கள் என்னைப்போன்ற கசப்பான பக்கத்தைப் பார்த்திருக்கமாட்டார்கள்.

இந்த தேவா படத்தில், என் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது; மனதில் பட்டதைச் சொல்ல பயப்படாத கதாபாத்திரமாக இருந்தது'' என நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார். 

மேலும்,''எனது சொந்த ஊரான மும்பையில் நான் சூட்டிங்கில் கலந்துகொண்டது இதுவே முதல் முறை. மும்பை நகரின் மையப்பகுதியில் சூட்டிங் நடந்தது மிகவும் உற்சாகமாக நடந்தது’’ என நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

(3 / 6)

பாலிவுட் படங்களில் தனக்கென அடையாளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள நடிகை பூஜா ஹெக்டே, படப்பிடிப்பின்போது தனது சக நடிகரிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு விஷயம் குறித்து பகிர்ந்துகொண்டார். அதில், "ஒரு நல்ல நடிகருடன் பணிபுரிவது எளிது'' என்றார். 

(4 / 6)

‘’ஏனென்றால் நீங்கள் அவர்களுக்கு ரியாக்ட் செய்வீர்கள் அவ்வளவுதான். க்ளோஸ்-அப் காட்சிகள் எனக்கு நினைவிருக்கிறது. அங்கு நடிகர் ஷாஹித் கபூர் மிகவும் நன்றாக நடித்தார். 'நான் மீண்டும் என் ஷாட்டை செய்ய வேண்டுமா?' என்று இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஷாஹித் கபூரின் நடிப்பில் உண்மை இருக்கிறது. அதைக் காட்டினால் போதும்" என்று கூறி முடித்தார், நடிகை பூஜா ஹெக்டே.

(5 / 6)

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் விஜய்யின் 69ஆவது படத்தில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் சூர்யாவுடன் ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்