தொங்கும் தொப்பையை துரத்தியடிக்கும் பேரிட்சை பழம்; 8 வழிகளில் பயன்படுத்தினால் பலன் உறதி!
- தொங்கும் தொப்பையை துரத்தியடிக்கும் பேரிட்சை பழத்தை 8 வழிகளில் பயன்படுத்தினால் பலன் கிடைப்பது உறுதியாகும்.
- தொங்கும் தொப்பையை துரத்தியடிக்கும் பேரிட்சை பழத்தை 8 வழிகளில் பயன்படுத்தினால் பலன் கிடைப்பது உறுதியாகும்.
(1 / 9)
அதிக நார்ச்சத்துக்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும் - பேரிட்சையில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்களின் செரிமானத்தை மெதுவாக்குகிறது. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இது உங்களின் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நீங்கள் அதிகம் உட்கொள்வது தவிர்க்கப்பட்டு, உங்கள் உடல் எடையைக் சரியான அளவில் பராமரிக்கத் தேவையாக உள்ளது.
(2 / 9)
இயற்கை சர்க்கரை சாப்பிடவேண்டும் என்ற உணர்வைக் குறைக்கும் - பேரிட்சை பழத்தில் உள்ள ஃப்ருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகிய இயற்கை சர்க்கரைகள், உங்களின் இனிப்பு சாப்பிடவேண்டும் என்ற எண்ணத்தைக் கட்டுப்படுத்தும். இதனால் நீங்கள் வேறு இனிப்புகள் சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இது உங்களின் இனிப்பு சாப்பிடும் அளவை குறைப்பதுடன், ஆரோக்கியமாக உங்களை இனிப்பு எடுத்துக்கொள்ள வைக்கிறது. இதனால் உங்கள் உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படுகிறது.
(3 / 9)
தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து வளர்சிதைக்கு ஊக்கமளிக்கிறது - பேரிட்சை பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. குறிப்பாக பி வைட்டமின்கள், இரும்புச்சத்துக்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. இது உங்கள் உடலில் ஆற்றல் உருவாகவும், உடல் வளர்சிதைக்கும் உதவுகிறது. உங்கள் உடலில் நல்ல வளர்சிதை மாற்றங்கள் நேரும்போதுதான் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும்.
(4 / 9)
ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது - இது இனிப்பாக இருந்தாலும், பேரிட்சை பழம், குறைவானது முதல் மிதமானது வரையிலான இனிப்பு உணவுகளில் உள்ளது. இது மெதுவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். இது சர்க்கரை திடீரென உயர்வதைத் தடுக்கும். இதனால் பசி மற்றும் சாப்பிடவேண்டும் என்ற உணர்வு ஆகியவை கட்டுப்படுத்தப்படும். இதனால் நீங்கள் அடிக்கடி சாப்பிட மாட்டீர்கள்.
(5 / 9)
செரிமான ஆரோக்கியம் மற்றும் வயிறு உப்புசம் - பேரிட்சை பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் குடல் இயக்கத்தை முறைப்படுத்தி நன்முறையில் இயங்கச் செய்கிறது. இது வயிறு உப்புசத்தைக் குறைக்கிறது. நல்ல முறையில் இயங்கும் செரிமான மண்டலம், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்பை அகற்ற உதவுகிறது.
(6 / 9)
உடலில் உள்ள கழிவுகளை இயற்கையில் நீக்கும் - பேரிட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இந்த கரோட்டினாய்ட்கள், ஃப்ளாவனாய்ட்கள் மற்றும் ஃபினோலிக் அமிலம் என அனைத்தும், ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது. உங்கள் உடல் கழிகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. உடல் கொழுப்பை நன்முறையில் பயன்படுத்த உதவுகிறது.
(7 / 9)
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது - இதில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்கள், விரைவில் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைத்தரும். ஆற்றலை உடலில் நிலைக்கச் செய்யும். தினமும் இரண்டு பேரிட்சை பழங்கள் சாப்பிடுவதால் உங்கள் உடற்பயிற்சி நேரத்த்தில் நீங்கள் செய்யும் பயிற்சியால் உடல் இழக்கும் ஆற்றல் தக்கவைக்கப்படுகிறது. உங்கள் உடலுக்கு உடற்பயிற்சி செய்ய தேவையான ஆற்றலும் கிடைக்கிறது. இது கொழுப்பை நன்றாகக் கரைக்கிறது.
(8 / 9)
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது - இதில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்கள், விரைவில் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைத்தரும். ஆற்றலை உடலில் நிலைக்கச் செய்யும். தினமும் இரண்டு பேரிட்சை பழங்கள் சாப்பிடுவதால் உங்கள் உடற்பயிற்சி நேரத்த்தில் நீங்கள் செய்யும் பயிற்சியால் உடல் இழக்கும் ஆற்றல் தக்கவைக்கப்படுகிறது. உங்கள் உடலுக்கு உடற்பயிற்சி செய்ய தேவையான ஆற்றலும் கிடைக்கிறது. இது கொழுப்பை நன்றாகக் கரைக்கிறது.
(9 / 9)
புரதம் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது - பேரிட்சையையும் புரதச்சத்துக்கள் கொண்ட உணவுகளையும் சேர்த்து சாப்பிடும்போது, அது உடல் புரதச்சத்துக்களை நன்றாக கிரகித்துக்கொள்ள உதவுகிறது. இது உங்கள் தசைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உங்களுக்கு அதிக தசை இருந்தால், அது உங்களின் உடல் வளர்சிதையை ஊக்குவிக்கிறது. இது அதிக கலோரிகளை குறைக்க உதவுகிறது. நீங்கள் ஓய்வு எடுக்கும் நேரத்திலும் உங்களுக்கு கலோரிகள் குறைகிறது. உடல் எடையைக் குறைப்பதில் பேரிட்சையை எப்படி பயன்படுத்தவேண்டும்? - தினமும் 2 முதல் 4 பேரிட்சை பழத்தை நீங்கள் ஸ்னாக்ஸாக உட்கொள்ளவேண்டும். இதை நீங்கள் ஸ்மூத்திகள், சாலட்கள் அல்லது ஓட்சுடன் சேர்த்து சாப்பிடலாம். அதிகம் சாப்பிடுவதை தவிர்த்தல் நலம். ஏனெனில் பேரிட்சையில் அதிகம் கலோரிகள் உள்ளது. இதை நீங்கள் அன்றாட உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவுடன் எடுத்துக்கொள்ளவேண்டும். இது உங்களுக்கு உடல் ஆரோக்கியத்துக்கும், உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்கவும் உதவும்.
மற்ற கேலரிக்கள்