Celebrities Wishes Ajith: பத்ம பூஷன் விருதை பெற்ற அஜீத்! அரசியல் முதல் திரை உலகம் வரை வாழ்த்தும் பிரபலங்கள்!
- Celebrities Wishes Ajith: 2025 ஆம் ஆண்டு முழுக்கவே அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் கார் பந்தயத்தில் வெற்றி, பட அறிவிப்பை தொடர்ந்து பத்ம பூஷன் விருதும் கூடுதல் கொண்டாட்டமாக வந்துள்ளது. இதனையடுத்து அஜீத்திற்கு பலரும் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- Celebrities Wishes Ajith: 2025 ஆம் ஆண்டு முழுக்கவே அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் கார் பந்தயத்தில் வெற்றி, பட அறிவிப்பை தொடர்ந்து பத்ம பூஷன் விருதும் கூடுதல் கொண்டாட்டமாக வந்துள்ளது. இதனையடுத்து அஜீத்திற்கு பலரும் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
(1 / 7)
2025 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இதனையடுத்து தமிழ்நாட்டில் கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகை ஷோபனா, நடிகர் அஜித் குமார் உட்பட பலருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டன. நடிகர் அஜித்குமாருக்கு பலரும் அவர்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
(2 / 7)
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தியை பதிவு செய்துள்ளார். அதில் “வாழ்த்துகள் எங்கள் பத்மபூஷன் அஜித்குமார் சார். பெருமையாகவும் அளவற்ற மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
(3 / 7)
சசிக்குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டு இருந்தார். அதில் மதிப்புமிக்க பத்மபூஷண் விருது பெற்ற அஜித்குமார் சாருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
(4 / 7)
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், ஓய். எஸ். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆன ஜகன் மோகன் ரெட்டி அவரது எக்ஸ் தளத்தில், "மதிப்புமிக்க பத்மபூஷண் விருதைப் பெற்ற அஜித்குமார் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! சினிமாவுக்கு உங்கள் மகத்தான பங்களிப்புகளுக்கு ஒரு தகுதியான மரியாதை. உங்கள் அனைத்து ரசிகர்களுக்கும் துறையினருக்கும் பெருமை சேர்க்கும் தருணம்!
அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள். அவரது ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
(5 / 7)
நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தளத்தில், "அன்புள்ள ஏ.கே. சார்
பத்ம பூஷண் விருது பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மில்லியன் கணக்கானவர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் உங்கள் ஊக்கமளிக்கும் பயணத்திற்கு உண்மையிலேயே தகுதியான மரியாதை." எனக் குறிப்பிட்டுள்ளார்.
(6 / 7)
நடிகர் பார்த்திபன் அவரது பதிவில், "இன்று மதியம் ஒரு இசை பிரபலம், நண்பர் திரு அஜீத் குமாரின் எண் கேட்க,’ஏன்?” கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன்.ஒருவழியாக அவரின் மேலாளர் திரு சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தினேன். மாலையில் வந்த செய்தி அஜீத் கழுத்துக்கு மாலை என்பது மீறி,’ தலை’க்கு வைர கிரீடம் ஆனது. வாழத்துகள் பத்மபூஷன் அஜித் குமார்.
மற்ற கேலரிக்கள்