My V3 Ads: ’பணத்தை பதுக்கும் My V3 Ads! 60 லட்ச ரூபாய் கார் 40 லட்சத்துக்கு விற்பனை!’ அடேங்கப்பா! யாரு வீட்டு பணமோ!
- My V3 ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ள நிலையில் அந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாக கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி குற்றம்சாட்டி உள்ளார்.
- My V3 ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ள நிலையில் அந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாக கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி குற்றம்சாட்டி உள்ளார்.
(1 / 7)
(2 / 7)
(3 / 7)
சக்தி ஆனந்தன் மீது பதியப்பட்ட வழக்கில் அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வரும் ஜூலை 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
(4 / 7)
இதனை தொடர்ந்து My V3 Ads நிறுவனத்தின் சொத்துக்களை அரசு முடக்கம் செய்யும் அபாயம் இருப்பதால் அதன் சொத்துக்களை வந்த விலைக்கு விற்பனை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி குற்றம்சாட்டி உள்ளார்.
(5 / 7)
இது தொடர்பாக அசோக் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”My V3 Ads நிறுவனத்தின் விஜயராகவன் மதுரையில் 100 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் எம்.டி சக்தி ஆனந்தன் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், இந்த பணத்தை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.”
(6 / 7)
My V3 ads நிறுவனத்தின் இடங்கள் மற்றும் வாகனங்களை விற்பனை செய்து வருவதாக அசோக் ஸ்ரீநிதி குற்றம்சாட்டி உள்ளார். மூன்று மாதம் முன்னர் 65 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய ஃபார்சூனர் காரை 45 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.
மற்ற கேலரிக்கள்