‘அன்று காதல் பண்ணியது; உந்தன் கன்னம் கிள்ளியது’:குடும்பத்துடன் அஜித் - ஷாலினி.. கலக்கல் படங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘அன்று காதல் பண்ணியது; உந்தன் கன்னம் கிள்ளியது’:குடும்பத்துடன் அஜித் - ஷாலினி.. கலக்கல் படங்கள்!

‘அன்று காதல் பண்ணியது; உந்தன் கன்னம் கிள்ளியது’:குடும்பத்துடன் அஜித் - ஷாலினி.. கலக்கல் படங்கள்!

Dec 25, 2024 10:39 PM IST Marimuthu M
Dec 25, 2024 10:39 PM , IST

  • ‘அன்று காதல் பண்ணியது; உந்தன் கன்னம் கிள்ளியது’:குடும்பத்துடன் அஜித் - ஷாலினி.. கலக்கல் படங்கள்!

நடிகர் அஜித், சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ஷாலினியுடன் ஜோடியாக நடித்த படம்தான், அமர்க்களம். இப்படத்தில் ஒரு காட்சியில் அஜித், தன் கையில் கத்தியை வைத்து அறுக்க முயற்சிக்கையில், அது உண்மையிலேயே அறுத்துவிட்டதாம். இதனால், பதறிப்போன, ஷாலினி, அவரை நன்கு பார்த்துக்கொண்டாராம். இதில் இம்ப்ரஸ் ஆன அஜித், ஷாலினியிடம் தன் காதலைச் சொல்ல, படப்பிடிப்புத் தளத்திலேயே ஓகே சொல்லியிருக்கிறார், ஷாலினி.

(1 / 6)

மேலும்,1999ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்த நாள் பரிசாக எண்ணற்ற பரிசுப்பொருட்களை, இயக்குநர் சரண் மூலம் அஜித்திடம் கொண்டு சேர்த்திருக்கிறார், ஷாலினி. இதனால் நெகிழ்ந்துபோன அஜித் தனது காதல் குறித்து, தன் பெற்றோரிடமும் அஜித்தின் பெற்றோரிடமும் பேசி, திருமணம் செய்துகொள்ள சம்மதம் பெற்றுள்ளார். அப்போது அஜித் பெரிய நடிகராக இல்லையென்றாலும், மகள் மீது வைத்த நம்பிக்கை காரணமாக, ஷாலினியின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார், ஷாலினியின் தந்தை.

(2 / 6)

அதன்பின் ஏப்ரல் 24, 2000ஆம் ஆண்டு, சென்னையில் வைத்து அஜித் - ஷாலினி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தில் முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன் வளர்ப்பு மகன்போல் அஜித்தின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின், சினிமாவில் இருந்து விலகி, குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆர்வம் காட்டினார், ஷாலினி.

(3 / 6)

அதன்பின் அஜித் வாழ்வில் கிடைத்த எண்ணற்ற ஏற்ற இறக்கங்கள், படத்தோல்விகள், இழிவான சொல்கள் இதையெல்லாம் இருவரும் சேர்ந்தே அனுபவித்தனர். அஜித்தும் மோட்டார் ரேஸில் ஈடுபட்டு எண்ணற்ற அறுவை சிகிச்சைகளுக்கு ஆளானார். அஜித் - ஷாலினி தம்பதியினர் 8 ஆண்டுகளுக்குப்பின்னர், அனோஷ்கா என்னும் பெண் குழந்தையைப் பெற்றனர். அதன்பின் அஜித் - ஷாலினி தம்பதியினர் 7 ஆண்டுகள் கழித்து, ஆத்விக் என்னும் ஆண் குழந்தையைப் பெற்று எடுத்தனர்.

(4 / 6)

அடிப்படையில் பைக் ரேஸராகவும் கார் பந்தய வீரராகவும் இருக்கிறார், அஜித். அவரது மனைவி ஷாலினியும் பேட்மிண்டன் வீராங்கனையாக இருக்கிறார். இந்நிலையில் அவரது மகன் ஆத்விக் ஃபுட் பாலில் ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார். தனது ரசிகர்களையும் குடும்பத்தைத் தாண்டி, ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸில் இருக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார், அஜித் குமார். 

(5 / 6)

இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா தம்பதியினரின் ரிஷப்ஷன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஸ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் கலந்துகொண்டனர். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்