காங்கிரஸின் முக்கிய ஆளுமை.. சோனியா காந்தியின் பிறப்பு முதல் அரசியல் குடும்ப வாரிசு வரை.. படங்கள்
சோனியா காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. காங்கிரஸின் முக்கிய ஆளுமை.. சோனியா காந்தியின் பிறப்பு முதல் அரசியல் குடும்ப வாரிசு வரை.. படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
(1 / 6)
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மருமகளும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது இயற்பெயர் சோனியா மைனோ ஆகும். சோனியா மைனோ 1946ஆம் ஆண்டு, டிசம்பர் 9ஆம் தேதி இத்தாலியின் லூசியானாவில் ஸ்டெபானோ மற்றும் பாவ்லா மைனோ ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். அது பாரம்பரியமான ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பமாகும்.
(2 / 6)
1964ல் சோனியா மைனோ, கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மொழிப்பள்ளியில் ஆங்கிலம் படிக்கச் சென்றார். அப்போது கேம்பிரிட்ஜ் பல்கலையில் டிரினிட்டி கல்லூரியில் பொறியியல் படிப்புக்காக சேர்ந்த ராஜீவ் காந்தியை உணவகத்தில் வைத்து சந்தித்தார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
(3 / 6)
அதனைத் தொடர்ந்து 1968-ல் ராஜீவ் - சோனியா இருஅரும் டெல்லியில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1970ஆம் ஆண்டு ராகுலும், 1972ஆம் ஆண்டு பிரியங்காவும் பிறந்தனர்.
(4 / 6)
ஆரம்பத்தில் சோனியா அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பின், ராஜீவ் காந்தி அமேதியில் போட்டியிடும்போது, அவரை எதிர்த்துப்போட்டியிட்ட மேனகா காந்திக்கு எதிராக தீவிரமாகப் பரப்புரையில் ஈடுபட்டார். 1984 முதல் 1990 வரை பிரதமரின் மனைவியாக அறியப்பட்டார், சோனியா காந்தி.
(5 / 6)
தனது கணவர் ராஜீவ்வின் மரணத்துக்குப் பின் காங்கிரஸின் தலைமைப் பதவியில் சேர ஆர்வம் இல்லாமல் இருந்தார். அதன்பின் 1997ல் காங்கிரஸ் தலைவர் ஆனார். 2004ல் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கி, தேசிய ஆலோசனைக் குழுவுக்கு தலைமை தாங்கினார்.
(6 / 6)
வெகு நாட்களாக அரசியலில் இருந்து விலகி இருந்த சோனியா காந்தி, காங்கிரஸ் நாட்டாளுமன்ற கட்சித் தலைவராக உள்ளார். மேலும்,
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கட்சியின் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வதோரா, புதுதில்லியில் வயநாடு தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்ற பிறகு, தனது தாயும், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சோனியா காந்தி மற்றும் அவரது சகோதரரும், ராகுல் காந்தியுடன் இருக்கும் தருணம் இது.
மற்ற கேலரிக்கள்