Pennyquick:பணத்தை நிறுத்திய அரசு.. மனைவியின் நகைகளை விற்று முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுயிக் பிறந்தநாள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pennyquick:பணத்தை நிறுத்திய அரசு.. மனைவியின் நகைகளை விற்று முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுயிக் பிறந்தநாள்

Pennyquick:பணத்தை நிறுத்திய அரசு.. மனைவியின் நகைகளை விற்று முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுயிக் பிறந்தநாள்

Jan 15, 2025 09:33 AM IST Marimuthu M
Jan 15, 2025 09:33 AM , IST

  • பணத்தை நிறுத்திய ஆங்கிலேய அரசு.. மனைவியின் நகைகளை விற்று முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய ஜான் பென்னிகுயிக் பிறந்தநாள் குறித்தும் நன்றி மறவாத தேனி மாவட்ட மக்கள் குறித்தும் பார்ப்போம். 

தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய தலைமைப் பொறியாளர், ஜான் பென்னிகுயிக்கின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜான் பென்னிகுயிக், குறிப்பாக தேனி மாவட்ட மக்களால் மனிதக் கடவுளாகப் பார்க்கப்படுகிறார்.

(1 / 6)

பெரியாறு நதியின் நீர்ப்பகுதி மேற்கு நோக்கிப் பாய்கிறது. அப்போது நிலவிய பஞ்சத்தின்காரணமாக, 1789ஆம் ஆண்டு, ராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் அமைச்சர் முத்திருளப்ப பிள்ளை, பெரியாறு அணையில்  இருந்து நீரைப்பெற்று, வைகையில் இணைக்கும் திட்டம் ஆராயப்பட்டு, கைவிடப்பட்டது. அது 1876-77ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும்பஞ்சத்தால் பிரிட்டிஷ் அரசால் தீவிரமாக ஆராயப்பட்டது.1882ஆம் ஆண்டு, இந்த அணைகட்ட பொறுப்பேற்று, அதன் திட்டம் மதிப்பீட்டை 1884ல் முடித்தார். அந்த வருடமே முல்லைப்பெரியாறு அணையைக் கட்ட அந்த புராஜெக்ட் அங்கீகரிக்கப்பட்டது. 

(2 / 6)

இந்த முல்லைப்பெரியாறு அணை கட்டுவதற்காக, 1886ஆம் ஆண்டு, திருவிதாங்கூர் மகாராஜா திருநாள் ராமவர்மாவுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் 999 ஆண்டுகளுக்கு, 8100 ஏக்கர் குத்தகையாகப் பெறப்பட்டது. இருந்தாலும் முல்லைப்பெரியாறு அணையின் கட்டுமானப்பணிகள் நினைத்ததைவிட சவால் நிறைந்ததாக இருந்தது. 

(3 / 6)

இந்த முல்லைப்பெரியாறு அணையைக் கட்டுவதற்காக அணையின் அருகிலேயே தற்காலிகப் பணியாளர்கள் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. இதில் கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளிகள் தங்க வைக்கப்பட்டனர். ஆற்றின் நீரைத் தடுக்க கட்டப்பட்ட தற்காலிக அணைகள் அடிக்கடி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால், ஆங்கிலேயர்கள் இந்த திட்டத்திற்கு நிதியளிப்பதை நிறுத்தினர். ஆனால், முல்லைப்பெரியாறு அணை கட்டுமானத்தின் தலைமைப் பொறியாளரான பென்னிகுயிக், பணியைத் தொடர, தனது மனைவியின் நகைகளை விற்று நிதி திரட்டினார். 

(4 / 6)

முல்லைப் பெரியாறு அணையானது, கட்டும்போது, லோயர் கேம்பில் உள்ள குருவனூத்து என்னுமிடத்தில் சுண்ணாம்பு கற்கள் எடுக்கப்பட்டன.  இந்த அணையானது புவி ஈர்ப்பு விசையைக் கருத்தில்கொண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் கட்டுமானத்தின்போது வனவிலங்கு தாக்குதல், மலேரியா பரவல் காரணமாக மட்டும், 483 கட்டுமானத்தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அணையைத்தாண்டி, சுரங்கப்பாதை 5704 அடி நீளத்துக்கு வெட்டப்பட்டது. இப்படி பல்வேறு தடைகளைத்தாண்டி, 1895ஆம் ஆண்டு, முல்லைப்பெரியாறு அணையானது கட்டிமுடிக்கப்பட்டது. 

(5 / 6)

இந்த முல்லைப்பெரியாறு அணையை அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னர் வென்லாக் பிரபு திறந்து வைத்தார். இதனால், தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் 2 லட்சத்து 23ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதனால் ஜான் பென்குயிக் அவர்களை தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்கள் கடவுள் போல் பார்க்கின்றனர். குறிப்பாக, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பலர் தங்கள் குழந்தைகளின் பெயருக்கு பென்னிகுயிக் எனப் பெயர் வைத்தனர். தங்கள் உணவகங்கள், வாகன நிறுத்த இடங்களுக்கு பென்னிகுயிக்கை சூட்டி மகிழ்ந்தனர். மேலும் பென்னிகுயிக்கிற்கு பொங்கல் வைத்தனர். கடவுளைப்போல் பாவிக்கின்றனர்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்