PM Modi in Trichy: ’உங்கள் எதிர்கால திட்டம் என்ன?’ பிரதமர் மோடியின் ஜாலி டாக்!
- ”2014 இல் 4000 ஆக இருந்த காப்புரிமைகளின் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 50,000 ஆக அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்”
- ”2014 இல் 4000 ஆக இருந்த காப்புரிமைகளின் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 50,000 ஆக அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்”
(1 / 11)
19,850 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க, திருச்சி வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
(PMO Twitter)(2 / 11)
முதல் நிகழ்ச்சியாக பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொதிருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
(PTI)(3 / 11)
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த கவிஞர் பாரதிதாசனின் மார்பளவு சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
(ANI)(4 / 11)
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற உள்ள மாணவ, மாணவிகள் உடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்க்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் உள்ளனர்.
(ANI)(5 / 11)
குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்ட பின் மாணவர்கள் அருகே சென்ற பிரதமர் மோடி உங்களின் எதிர்கால திட்டம் என்ன? என்று கேட்டு கலந்துரையாடினார்.
(ANI)(6 / 11)
பல்வேறு துறைகளில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பட்டங்களை வழங்கினார்.
(ANI)(7 / 11)
எனது மாணவ குடும்பமே’ என்று தமிழில் கூறி பிரதமர் தனது பேச்சை தொடங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா 2024 புத்தாண்டில் தனது முதல் பொது உரையாடல் என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.
(PTI)(8 / 11)
காஞ்சிபுரம், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் அடிக்கடி வந்து செல்லும் சிறந்த பல்கலைக்கழகங்களின் தாயகமாகவும் உள்ளது என பிரதமர் கூறினார்.
(ANI)(9 / 11)
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனைகளை படைத்து, ஐந்தாவது வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மாறியது மற்றும் இந்திய பல்கலைக்கழகங்கள் சாதனை எண்ணிக்கையில் உலகளாவிய தரவரிசையில் முத்திரை பதித்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
(PTI)(10 / 11)
புதிய தோர் உலகு செய்வோம் என்ற பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு பேசிய பிரதமர், இந்திய இளைஞர்கள் ஏற்கனவே அத்தகைய உலகத்தை உருவாக்கி வருகின்றனர் என்றார்.
(PTI)மற்ற கேலரிக்கள்