தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips : உங்கள் குழந்தைகளை உளவு பார்க்கிறீர்களா? அச்சச்சோ போச்சு! எத்தனை ஆபத்துக்கள் பாருங்கள்!

Parenting Tips : உங்கள் குழந்தைகளை உளவு பார்க்கிறீர்களா? அச்சச்சோ போச்சு! எத்தனை ஆபத்துக்கள் பாருங்கள்!

Jul 09, 2024 06:31 AM IST Priyadarshini R
Jul 09, 2024 06:31 AM , IST

  • Parenting Tips : உங்கள் குழந்தைகளை உளவு பார்க்கிறீர்களா? அச்சச்சோ போச்சு! எத்தனை ஆபத்துக்கள் பாருங்கள்!

ஏன் உளவு பார்ப்பது ஆபத்தானது - நமது வாழ்வில் எங்கும் தொழில்நுட்பம் நீக்கமற நிறைந்துள்ளது. அது நமது வாழ்வில் பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. ஆனால் இந்த டிஜிட்டல் நுட்பத்தை பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உளவு பார்க்கப்பயன்படுத்துகிறார்கள். உங்கள் குழந்தைகளை உளவு பார்ப்பது உங்களுக்கே ஆபத்தாக வந்து அமையும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

(1 / 10)

உறவை பாதித்து நம்பிக்கையை அழிக்கும் - எந்த ஒரு ஆரோக்கியமான உறவுக்கும் நம்பிக்கை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைகளை உளவு பார்க்கத் துவங்கிவிட்டால், அது பெற்றோர் – குழந்தைகள் உறவில் நம்பிக்கையை குலைக்கும். குழந்தைகளின் ப்ரைவசி பாதிக்கப்படுகிறது என்பதை குழந்தைகள் உணரும்போது அவர்களுக்கு துரோகம் மற்றும் வெறுப்பு உணர்வுகள் ஏற்படத்துவங்கும்.

(2 / 10)

ரகசிய நடவடிக்கைகள் - குழந்தைகளை நீங்கள் தொடர்ந்து கண்காணிப்பது தெரிந்தால் அவர்கள் செய்வதையும், அவர்களின் செயல்களையும் மூடி மறைப்பார்கள். மேலும் பெற்றோரின் கண்காணிப்பில் இருந்து நழுவி ஓடுவது எப்படி என்று பார்ப்பார்கள். இதனால் அவர்களுக்கு அவநம்பிக்கை மற்றும் ஏமாற்றும் மனநிலை ஏற்பட்டு அதை மாற்ற முடியாமலே போய்விடும்.

(3 / 10)

சுதந்திரத்தை பாதிக்கிறது - குழந்தைகளுக்கு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் கொடுக்கப்படவேண்டும். அது அவர்களின் சொந்த அடையாளங்களை உருவாக்க உதவும். அவர்கள் எவ்வாறு முடிவுகள் எடுக்க முடியும் என்பதை தெரிந்துகொள்வார்கள். எனவே குழந்தைகளை தொடர்ந்து கண்காணிப்பது, அவர்களின் திறன்களை பாதிக்கும். அவர்களால் சுதந்திரமாக சிந்திக்கக்கூட முடியாது. அவர்களால் தங்களின் பிரச்னைகளை தாங்களாகவே தீர்த்துக்கொள்ள முடியாமல் போய்விடும்.

(4 / 10)

பயம் மற்றும் மனஅழுத்தம் அதிகரிப்பு - தங்களை பெற்றோர்கள் கண்காணிக்கிறார்கள் என்பதை குழந்தைகள் அறிந்துகொண்டால் அவர்கள் அதிகளவிலான மனஅழுத்தம் மற்றும் பயத்த்தை உணர்வார்கள். கண்காணிப்பில் இருக்கும் குழந்தைகள் எப்போதும் ஒருவித மனஅழுத்தத்துடன் இருப்பார்கள். பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தமும் அவர்கள் மேல் இருக்கும். இதனால் அவர்களின் மனஅழுத்தம் அதிகரித்து, அவர்களுக்கு மனநலக்கோளாறுகள் ஏற்படும்.

(5 / 10)

பாதுகாப்பின்மை - நீங்கள் உங்கள் குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்கும்போது, சில அபாயங்கள் குறித்த எச்சரிக்கை கிடைக்கப்பெறும். இது ஆபத்தான நடவடிக்கைகளை தடுக்காது மற்றும் தவறான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும். குழந்தைகள் ஆபத்தான நடவடிக்கைகளில் குழந்தைகள் ஈடுபடுவார்கள். அவர்கள் கண்காணிப்படும் பரப்பில் இருந்து தப்பி தவறு செய்ய முனைவார்கள். இதுகுறித்து உங்களுக்கு தெரியவும் வராது. அதனால் நீங்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படும்.

(6 / 10)

குழந்தைகளின் சமூகத்திறன்களை பாதிக்கும் - உங்கள் குழந்தைகளை நீங்கள் கூடுதலாக கண்காணிப்பது உங்கள் குழந்தைகளின் சமூகத்திறன்களை பாதிக்கும். இதனால் அவர்கள் அதிகப்படியாக ஒருவரை சார்ந்தே வாழ்வார்கள். பெற்றோரின் வழிகாட்டுதல் இல்லாமல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. குழந்தைகளை நெருக்கமாக கண்காணிக்கும்போது, அவர்களால் சமூகத்திறன்களை வளர்த்துக்கொள்ள முடியவில்லை. மேலும் அவர்களின் வயதையொத்தவர்களுடனான உறவையும் வலுப்படுத்த முடியவில்லை.

(7 / 10)

தனிப்பட்ட பிரைவசிக்குள் நுழைதல் - நாம் நமது குழந்தைகளை கண்காணிக்கும்போது, அது அவர்களின் ப்ரைவசி உரிமையை மீறும் செயலாகிறது. அவர்களுக்கு ப்ரைவசிக்கு மதிப்பில்லை மற்றும் அதற்கு மரியாதை கிடையாது என்பதை அவர்களுக்கு போதிக்கிறது. இதுபோல் குழந்தைகளின் ப்ரைவசிக்குள் அத்துமீறி நுழையும்போது, அது தனிப்பட்ட எல்லைகளின் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மற்றவர்களின் ப்ரைவசியை மதித்தல் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்காமல், அவர்களும் மற்றவர்களின் ப்ரைவசியை மதிக்காமல் நடந்துகொள்ள வித்திடுகிறது.

(8 / 10)

உங்கள் குழந்தைகளை உளவு பார்க்கிறீர்கள் என்றால், ப்ளீஸ் அந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள். அதனால் எத்தனை ஆபத்துக்கள் என்று பார்த்தீர்களா? 

(9 / 10)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:https://twitter.com/httamilnews https://www.facebook.com/HTTamilNews https://www.youtube.com/@httamil Google News: https://bit.ly/3onGqm9 ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

(10 / 10)

மற்ற கேலரிக்கள்