தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips : குழந்தைகளுக்கு கொஞ்சம் இடம் கொடுப்பதால் என்ன ஆகிறது பாருங்கள்! இதை மட்டும் செஞ்சிடாதீங்க!

Parenting Tips : குழந்தைகளுக்கு கொஞ்சம் இடம் கொடுப்பதால் என்ன ஆகிறது பாருங்கள்! இதை மட்டும் செஞ்சிடாதீங்க!

Jun 16, 2024 07:30 AM IST Priyadarshini R
Jun 16, 2024 07:30 AM , IST

  • Parenting Tips : குழந்தைகளுக்கு கொஞ்சம் இடம் கொடுப்பதால் என்ன ஆகிறது பாருங்கள்! இதை மட்டும் செஞ்சிடாதீங்க!

சுயஒழுக்கம் குறைவு - நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொஞ்சம் இடம்கொடுத்தாலும், அந்த குழந்தைகளுக்கு சுயஒழுக்கம் குறையும். அவர்களுக்கு சீரான எல்லைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இல்லாமல், அவர்களுக்கு நடத்தைகளை முறைப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். அவர்களால், பொறுப்பான முடிவுகளை எடுக்கவும் முடியாது.

(1 / 10)

சமூகத்திறன் குறைவு - நீங்கள் உங்கள் குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு அனுமதிக்கும் பெற்றோராக இருந்தால், அவர்களுக்கு சமூகத்திறன்கள் வளர்வதில் குறைபாடு இருக்கும். குழந்தைகள் சில சமூக விதிகளை புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம். அதிகாரத்தை மதிப்பது தெரியாது. அவர்கள் உடன் படிப்பவர்கள் மற்றும் பெரியவர்களிடம் அவர்கள் முறையாக உரையாட மாட்டார்கள்.

(2 / 10)

குறைந்த சாதனைகள் - தெளிவான எதிர்பார்ப்புகள் மற்றும் வழிகாட்டிகள் இல்லாமல், குழந்தைகளுக்கு சாதனைகளை செய்ய ஊக்குவிப்பது குறையும்போது, அவர்களின் பள்ளி மறறும் மற்ற சாதனைகள் தடைபடும். அவர்கள் பள்ளியில் சிறந்து விளங்க மாட்டார்கள். மற்ற சூழல்களில், ஒழுக்கம் மற்றும் தேவையான முன்னெடுப்புகள் என எதுவும் அவர்களுக்கு இருக்காது.

(3 / 10)

சுய நலவாதம் -எதை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கும் பெற்றோர்களால் அவர்கள் உழைப்பின்றி முன்னேற வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் எந்த முயற்சியும் இன்றியும், மற்றவர்கள் குறித்த அக்கறையின்றியும் வளர்வார்கள். அப்படியே முன்றே வேண்டும் என்று நினைப்பார்கள். இது அவர்களுக்கு சுயநல குணத்தை வளர்த்தெடுக்கும். உறவுகளையும் அவர்கள் சரியாக பராமரிக்க மாட்டார்கள்.

(4 / 10)

உணர்வு ரீதியான பாதுகாப்பின்மை - அன்பு மற்றும் பாசம் என எதை நீங்கள் அதிகம் கொடுத்தாலும், எதை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கும் குழந்தைகள், உணர்வு ரீதியாக பாதுகாப்பின்றி உணர்வார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் எல்லைகள், ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் எதிர்பாராத சூழல் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும். இது உணர்வு ரீதியாக நிலையின்மைக்கு வழிவகுக்கும்.

(5 / 10)

முடிவெடுக்கும் திறன் குறைவு - எதை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை முடிவுகள் எடுக்க தாங்களாகவே எடுக்க அனுமதிப்பர். அவர்களுக்கு போதிய வழிகாட்டல்கள் இருக்காது. இதனால், அவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் குறையும். அவர்களுக்கு பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள குறைவான அனுபவங்களே இருக்கும். அவர்களிடம் இருந்து முறையான ஃபீட்பேக்கும் கிடைக்காது. 

(6 / 10)

நடத்தை பிரச்னைகள் - தெளிவான விதிகள் மற்றும் பிரச்னைகள் இல்லாவிட்டாவிட்டால், குழந்தைகளுக்கு நடத்தை பிரச்னைகள் ஏற்படும். கோவம், எரிச்சல், எதிர்க்கும் குணம், தூண்டுதல் என அவர்களுக்கு எண்ணற்ற பிரச்னைகள் ஏற்படும். அவர்கள் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படும். அவர்கள் பலவகை விதிகளையும் கடைபிடிப்பதில் சிரமம் இருக்கும்.

(7 / 10)

மனஅழுத்தத்தை கையாள்வதில் சிக்கல் - எதை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கும் பெற்றோர், மனஅழுத்தத்தை கையாள்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். ஒழுக்கம் அல்லது முறையான பழக்கவழக்கங்களை அவர்கள் கடைபிடிக்காததால், அவர்களுக்கு அது சவால்களை சந்திப்பதிலும், பின்விளைவுகளை எதிர்கொள்வதிலும், சிக்கலை ஏற்படுத்தும்.

(8 / 10)

தன்னம்பிக்கை குறையும் - எதைவேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கும் பெற்றோரால், குழந்தைகளின் சுய முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை குறையும். எல்லைகள் குறைவதால், குழந்தைகளை குறைத்து எடைபோடுவதை உணர்த்தும். அவர்களின் பெற்றோர் அதிகளவில் கவனிக்கமாட்டார்கள். அவர்களுக்கு போதிய எல்லைகளை வகுத்து, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கமாட்டார்கள்.

(9 / 10)

சுகாதார பிரச்னைகள் - எதை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கும் பெற்றோரால், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும். இதனால் அவர்கள் பெற்றோர்கள் வழிகாட்டுதலின்றி எதை வேண்டுமானாலும், ஆரோக்கியமற்ற உணவுகளைக்கூட சாப்பிடுவார்கள். மேலும் உட்கார்ந்த இடத்தில் செல்ஃபோன் பார்ப்பது, டீவி பார்ப்பது என இருப்பார்கள். இதனால், அவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகள், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்