Parenting Tips : உங்கள் குழந்தைகளை நீங்கள் அதிகம் பாதுகாக்கும் பெற்றோராக இருந்தால் என்னவாகும் பாருங்கள்!
- Parenting Tips : உங்கள் குழந்தைகளை நீங்கள் அதிகம் பாதுகாக்கும் பெற்றோராக இருந்தால் என்னவாகும் பாருங்கள்!
- Parenting Tips : உங்கள் குழந்தைகளை நீங்கள் அதிகம் பாதுகாக்கும் பெற்றோராக இருந்தால் என்னவாகும் பாருங்கள்!
(1 / 11)
நீங்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் - உங்கள் குழந்தையை வளர்ப்பது முதல் அவர்களை அதிகம் பாதுகாப்பது வரை, குழந்தை வளர்ப்பில் நீங்கள் கட்டாயம் ஒரு சமநிலையை கடைபிடிக்கவேண்டும். இது பெற்றோருக்கு சவாலான ஒன்றுதான். நீங்கள் உங்கள் குழந்தைகளை அதிகம் பாதுகாத்தால், அவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்திவிடும். அவர்களின் வளர்ச்சி மற்றும் சுதந்திரத்தை அது பாதிக்கிறது. எனவே அது என்ன பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள்.
(2 / 11)
தொடர் கண்காணிப்பு - நீங்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்தால், அவர்களுக்கு எந்த சுதந்திரமும் கொடுக்காமல், அவர்களை வளரவிடாமல் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்கள் குழந்தைகளை அதிகம் பாதுகாக்கிறீர்கள் என்று பொருள்.
(3 / 11)
முடிவுகள் - உங்கள் குழந்தைகளுக்கு தேவையான முடிவுகளை நீங்களே எடுத்தீர்கள் என்றால், அவர்களை சிறிய முடிவுகள் எடுப்பதற்கு கூட அனுமதிக்கவில்லையென்றால், அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையானதை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்கவில்லையென்றால், நீங்கள் அவர்களை அதிகம் பாதுகாக்கிறீர்கள் என்று பொருள்.
(4 / 11)
அதிக கவலை - நீங்கள் உங்கள் குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து அதிகம் கவலை கொள்கிறீர்கள் என்றால், தினசரியுமே நீங்கள் உங்கள் குழந்தைகள் குறித்து கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளை அதிகம் பாதுகாக்கிறீர்கள் என்று பொருள்.
(5 / 11)
ஆபத்துக்களை முற்றிலும் தவிர்ப்பது - உங்கள் குழந்தைகளை எவ்வித ஆபத்துக்கள் மற்றும் சவால்களையும் எதிர்கொள்ள நீங்கள் அனுமதிக்கவில்லையென்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளை அதிகம் பாதுகாக்கிறீர்கள் என்று பொருள். இதனால் உங்கள் குழந்தைகளின் பிரச்னைகளை தீர்க்கும் திறன் வளர்வதை நீங்களே தடுக்கிறீர்கள் என்று பொருள். இதனால் அவர்களால் பிரச்னைகளில் இருந்து மீண்டு எழ முடியாமல் போய்விடும்.
(6 / 11)
மற்றவர்கள் உரையாடும்போது தலையிடுவது - நீங்கள் உங்கள் குழந்தைகள் மற்றவர்களுடன் பேசும்போது, குறுக்கிடாதீர்கள், நண்பர்களுடான சண்டைகளில் தலையிடாதீர்கள். நட்பு அல்லது சண்டை எதுவாக இருந்தாலும், அவர்களே சுதந்திரமாக பிரச்னைகளை சரிசெய்ய அவர்களை அனுமதியுங்கள்.
(7 / 11)
பின்னடைவுகளுக்கு அதிகம் பதிலளிப்பது - நீங்கள் உங்கள் குழந்தைகள் தோல்விகளை சந்திக்கும்போது, அதற்கு அதிகப்படியாக எதிர்வினையாற்றுவது, அவர்களை தோல்விகள் மற்றும் அது கற்றுத்தரும் பாடங்களில் இருந்து, கற்பதை தடுப்பது என செய்தால், அது அவர்களை நீங்கள் அதிகம் பாதுகாக்கிறீர்கள் என்ற பொருளைத்தரும். அது அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் குலைக்கும்.
(8 / 11)
உண்மையில்லாத எதிர்பார்ப்புகள் - நீங்கள் உங்கள் குழந்தையிடம் அதிக எதிர்பார்ப்புக்களை வைத்துக்கொண்டு, உங்கள் குழந்தையின் வெற்றிகள் மற்றும் சாதனைகள் என அவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறீர்கள். இதனால் அவர்களால் சரியாக உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லையென்றால், அவர்கள் தாழ்வு மனப்பான்மை கொள்கிறார்கள். இதனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுவும் நீங்கள் அதிகம் பாதுகாப்பதால் ஏற்படுகிறது.
(9 / 11)
குறைவான எல்லைகள் - உங்கள் குழந்தைகளின் தேவைக்கான சுதந்திரம் மற்றும் உங்களின் சொந்த அக்கறை இரண்டுக்கும் இடையில் நீங்கள் எல்லைகளை வகுக்க முடியாமல் தடுமாறுகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளை அதிகம் பாதுகாக்கிறீர்கள் என்று பொருள். அவர்கள் மீது அடிக்கடி கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பையும் செய்தால் நீங்கள் அதிகம் பாதுகாக்கும் பெற்றோர் ஆவீர்கள்.
(10 / 11)
பொறுப்பு - உங்கள் குழந்தைகள் எதிர்கொள்ளும் எவ்வித சவால்கள் மற்றும் துன்பங்களுக்கு மற்றவர்களையும், பிறவற்றையும் குறை கூறினீர்கள் என்றால், நீங்கள் உங்கள் குழந்தைகள் அதற்கு பொறுப்பேற்பதை ஊக்குவிக்கவில்லையென்றால், அவர்களின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லையென்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளை அதிகம் பாதுகாக்கிறீர்கள் என்று பொருள். இவை அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கும் நடவடிக்கை ஆகும்.
(11 / 11)
மாற்றத்தை தவிர்ப்பது - உங்கள் பாதுகாப்பு உணர்வுக்கு சவால்விடும் மாற்றங்களை நீங்கள் தடுத்தீர்கள் என்றால், அது உங்கள் குழந்தைகளுக்கு புதிய விஷயங்கள் கற்பதை தடை செய்யும். அவர்கள் புதிய பொறுப்புக்களை வளர்ந்த பின்னரும் ஏற்கமாட்டார்கள். இது அவர்களின் முன்னேற்றத்துக்க தடையாக இருக்கும். எனவே அதிகம் பாதுகாக்கும் பெற்றோராகவும் இருக்காதீர்கள். அதிகம் சுதந்திரம் தரும் பெற்றோராகவும் இருக்காதீர்கள். இரண்டையும் சம அளவு கொடுத்து, அவர்கள் வளர வழிவிடுங்கள்.
மற்ற கேலரிக்கள்