தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips : உங்கள் குழந்தையின் சிறிய வெற்றியைக் கூட கொண்டாடவேண்டும்? ஏன் தெரியுமா?

Parenting Tips : உங்கள் குழந்தையின் சிறிய வெற்றியைக் கூட கொண்டாடவேண்டும்? ஏன் தெரியுமா?

Jun 24, 2024 06:00 AM IST Priyadarshini R
Jun 24, 2024 06:00 AM , IST

  • Parenting Tips : உங்கள் குழந்தையின் சிறிய வெற்றியைக் கூட கொண்டாடவேண்டும்? ஏன் தெரியுமா?

உங்கள் குழந்தைகளின் சிறிய வெற்றியைக் கூட கொண்டாட வேண்டும். அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

(1 / 11)

சிறிய வெற்றிகள் தான் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன - பட்டமளிப்பு விழா, மேடை நிகழ்ச்சிகள் என நீங்கள் பங்குகொள்ளக்கூடிய பெரிய விஷயங்களில் நீங்கள் உங்களின் வெற்றிகள் எளிதாக தெரிந்துவிடும். ஆனால், சிறிய வெற்றிகள்தான் உங்கள் குழந்தைகளை உருவாக்குபவை. எனவே அவற்றை நீங்கள் கொண்டாடவேண்டும். உங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்கள் வாழ்க்கையை நிர்ணயிப்பவையும் அவைதான். உங்கள் குழந்தைகளின் சிறிய வெற்றியைக் கூட நீங்கள் ஏன் கொண்டாடவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

(2 / 11)

தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பு - உங்கள் குழந்தையிடம் நீங்கள் கூறாமலே அவர்கள் தங்களின் வேலைகளை அல்லது வீட்டுப்பாடங்களை முடித்துவிடுவதற்காக அவர்களை பாராட்டுங்கள். அப்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் புன்னகை மற்றும் பெருமிதத்தை கவனித்தீர்கள் என்றாலே போதும். அது அவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். இந்த சிறிய விஷயங்கள்தான் அவர்களின் சுயமதிப்பை அதிகரித்து அவர்களின் தன்னம்பிக்கைக்கு அடிப்படையாக அமைகிறது. 

(3 / 11)

வலுவான ஆன்மா - வாழ்வு கடினமான பாதைகளால் ஆனது என்பதால், தினமும் வெற்றி மட்டுமே நிறைந்திருக்காது, தோல்வியும் ஏற்படும். எனவே அவர்களின் சிறிய வெற்றியைக் கூட கொண்டாடுவது அவர்களின் வளர்ச்சி, பெரியதாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறியதாக இருந்தாலே போதுமானது தினமும் பாராட்டுக்கள் கிடைக்கும் என்று அவர்கள் தினமும் எதையாவது முயற்சி செய்து வெற்றி பெற்றுக்கொண்டேயிருப்பார்கள். 

(4 / 11)

கற்றல் இன்பம் - உங்கள் குழந்தைகள் கடினமான ஒன்றை படிக்கும்போதும் அல்லது கஷ்டமான ஒரு கணக்கை தீர்க்கும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் உற்சாகத்தைப்பாருங்கள். அவர்களிடம் பொங்கிப்பெருகும் இந்த உணர்வுதான் அவர்களுக்கு கற்றலில் இன்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த சிறிய விஷயங்களுக்காக அவர்களை நீங்கள் பாராட்டினால், கற்றலும் அவர்களுக்கு இனிமையாகும். அதை கடமையாகக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் பாடங்களை மகிழ்ச்சியுடன் படிப்பார்கள். அதில் வெகுமதியும் கிடைக்கிறது. 

(5 / 11)

உணர்வு ரீதியான பலம் - உங்கள் குழந்தைகளின் சிறிய வெற்றிகளைக் கூட, நீங்கள் கொண்டாடுவது அவர்களின் நன்மைக்காக மட்டுமல்ல, அவர்கள் கடின காலங்களைக் கூட கையாள்வது குறித்து அவர்களுக்கு கற்பிக்கும். அவர்கள் என்ன சாதித்தார்கள் என்பதில் கவனம் செலுத்தும்போது, கடினமான காலங்களைக் கூட அவர்கள் எளிதாகக் கடந்துவிடுவார்கள். 

(6 / 11)

பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையே ஆழ்ந்த பிணைப்பு - நாம் குழந்தைகளின் சிறிய வெற்றிகளைக் கூட கொண்டாடும்போது, நமக்கு சிறப்பான மேஜிக் நடக்கிறது. அவர்கள் முதன்முதலில் நன்றாக பைக் ஓட்டினால், அவர்களின் வேலைகளை அவர்களே செய்துகொள்ளும்போது என அவர்களை நீங்கள் சிறிய விஷயங்களுக்கெல்லாம் பாராட்டும்போது, அவர்களின் உறவு வலுப்படுகிறது.

(7 / 11)

நன்றி மற்றும் நேர்மறை எண்ணம் - சிறிய விஷயங்களைக் கூட கொண்டாடுவது குழந்தைகளுக்கு, நன்றியுடைய மனதை வளர்க்க உதவும். அவர்களின் தினசரி பழக்கங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் தரும் எனில், அவர்கள் சிறிய விஷயங்களைக் கூட விடாமல் கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். 

(8 / 11)

ஆரோக்கியமான சுய போட்டி - சிறிய வெற்றிகளைக் கூட நாம் கொண்டாடுவது குழந்தைகளின் தனிப்பட்ட வளர்ச்சியை நாம் அங்கீகரிப்பதைக் குறிக்கும். இதனால் குழந்தைகள் தங்களின் முன்னால் வெற்றிகளைக் கடந்து முன்னேற வேண்டும் என்று எண்ணுவார்கள்.மற்றவர்களுடன் போட்டி போடுவதைவிட தங்களின் முந்தைய சாதனைகளை முறியடிக்க ஒரு ஆரோக்கியமான சுய போட்டி நடக்கும். அவர்களையே போடியிட்டு தங்களையே சிறப்பாக முன்னேற்றிக்கொள்வதுதான் உண்மையான வெற்றி என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். 

(9 / 11)

எதிர்காலத்துக்கு உத்வேகம் - குழந்தைகளின் சிறிய முயற்சிகளுக்குக் கூட பாராட்டு கிடைக்கும் என்பதை அவர்கள் பார்க்கும்போது, அவர்களுக்கு உத்வேகம் பிறக்கிறது. அவர்கள் எதிர்காலத்திற்கான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்கிறார்கள். இந்த வெற்றிகளும் அவர்களின் ஒவ்வொரு படியையும் எண்ணுவதற்கு அவர்களுக்கு உதவும். அவர்கள் உச்சத்தை அடைவதற்கு அவர்களுக்கு உத்வேகம் தரும். 

(10 / 11)

நேர்மறை எண்ணங்கள் - குழந்தைகளைப் பாராட்டும்போது அவர்களின் புன்னகையைப் பாருங்கள். அவர்களுக்கு அது நன்றி மற்றும் தயவுசெய்து என்ற வார்த்தைகளை நினைவூட்டுவதாக இருக்கும். அவர்கள் சொல்லாமலே அவர்கள் தங்களின் வேலைகளை செய்து முடித்துவிடுவார்கள். இந்த நிகழ்வுகளை நாம் அங்கீகரிக்கும்போது அவர்களுக்கு நற்செயல்களை மீண்டும் மீண்டும் செய்வதற்கு ஊக்குவிக்கும். அவர்கள் நேர்மறை எண்ணத்துடன் இருப்பார்கள். 

(11 / 11)

மற்ற கேலரிக்கள்