Parenting Tips : அடாவடித்தனம் செய்யும் குழந்தைகளை சத்தம்போட்டு அடக்கவேண்டாம்! என்ன செய்யவேண்டும் பாருங்க!
- Parenting Tips : அடாவடித்தனம் செய்யும் குழந்தைகளை சத்தம்போட்டு அடக்கவேண்டாம்! என்ன செய்யவேண்டும் பாருங்க!
- Parenting Tips : அடாவடித்தனம் செய்யும் குழந்தைகளை சத்தம்போட்டு அடக்கவேண்டாம்! என்ன செய்யவேண்டும் பாருங்க!
(1 / 11)
உங்கள் குழந்தைகள் கோவத்தில் சோர்ந்திருக்கும்போது அவர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? - உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் உங்களுக்கு சவால் கொடுப்பதாக உள்ளதா எனில், உங்களுக்கு அவர்களிடம் சத்தம்போட்டு அடக்கவேண்டும் என்று தோன்றும். நீங்கள் கத்தும்போது அந்த சூழல், உங்களை பாதிக்கும் மற்றும் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் இடையிலான உறவை பாதிக்கும். மாறாக அவர்களிடம் நீங்கள் சத்தம் போடாதீர்கள், இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். அவர்களை புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு புரிய வைக்கவும் முயற்சியுங்கள். அப்போது அவர்களின் பழக்கங்கள் மாறுவதை கவனியுங்கள்.
(2 / 11)
‘ஒரு சிறிய இடைவெளி எடுத்து அமைதியாகுங்கள்’ - உங்கள் குழந்தைகள் மற்றும் நீங்கள் இருவரும் எப்போதும் கத்தாமல் அமைதியாக இருப்பதை ஊக்குவியுங்கள். இது உங்களின் கடுமையான எதிர்வினைகளை தடுக்க உதவும். உங்களின் உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை ஒன்றிணைக்க உதவும். எனவே உங்கள் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்யும்போது, கொஞ்சம் இடைவெளி எடுத்து அந்த பிரச்னையை கையாளுங்கள்.
(3 / 11)
நீ கோவத்தில் இருக்கிறாய் என்பது எனக்கு தெரியும்? ஆனால் நாம் இதுகுறித்து அமைதியாகப் பேசவேண்டும் - உங்கள் குழந்தைகளின் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டுமெனில் ஒரு அமைதியான உரையாடல் என்பது தேவையானது. இது அவர்களுக்கு நீங்கள் கோவமாக இருக்கலாம் ஆனால், உங்களின் உணர்வுகளை மரியாதையுடன் வெளிப்படுத்தவேண்டும் என்று கற்றுத்தரும்.
(4 / 11)
என்ன நடக்கிறது என்று கூற முடியுமா? - உங்கள் குழந்தையின் கோணத்திற்கு நீங்கள் உண்மையான மதிப்பு கொடுக்க முடியும். உங்கள் குழந்தை அப்படி நடந்துகொள்வதற்கான காரணத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதன்மூலம் பிரச்னைக்கான காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியும். அப்போதுதான் உங்களால் பிரச்னைகளை எளிதாக தீர்கக முடியும்.
(5 / 11)
நாம் இருவரும் சேர்ந்து இதை எப்படி தீர்ப்போம்? - உங்கள் குழந்தைக்கு தீர்வு காணும் திறனை அதிகரிக்க உங்கள் குழந்தையும் இதில் ஈடுபடுத்துங்கள். இதனால் உங்கள் குழந்தைகளின் பிரச்னைகளை தீர்க்கும் திறன் அதிகரிக்கிறது. அவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறது மற்றும் அவர்களின் குறைகளையும் கேட்டது அவர்களிடமும் கேட்கப்படும் என்ற நிறைவைத்தரும்.
(6 / 11)
நீ இப்போது என்னை கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் - உங்களின் குரலை உயர்த்தாமல் அவர்களின் கவனிக்கும்படி உங்களின் இப்போதைய தேவை என்ன என்பதை தெளிவாகக் கூறிவிடுங்கள். இந்த நேரடி அணுகுமுறை, கத்துவதைவிட சிறந்தது. இது நீங்கள் தொடர்ந்து அவர்களுடன் உரையாடுவதற்கு மரியாதையான ஒரு வார்த்தையாக அமையும்.
(7 / 11)
நீ சிறப்பாக செய்வாய் என்பது எனக்கு தெரியும் - அவர்களின் நடவடிக்கைகளை அவர்கள் மாற்றுவார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அந்த நம்பிக்கை உங்களுக்கு உள்ளது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதுபோல் நீங்கள் நேர்மறையாக அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். இதுபோல் நீங்கள் உற்சாக்கப்படுத்தும்போது, அது அவர்களுக்கு சுயக்கட்டுப்பாட்டுடன் நல்ல நடத்தைக்கும் வழிவகுக்கிறது.
(8 / 11)
சரியான வழியில் நீங்கள் அதை மீண்டும் முயற்சி செய்யுங்கள் - அவர்களின் நடத்தைகளை மாற்றிக்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குங்கள். இது அவர்களின தவறுகளும் கற்றலின் ஒரு அங்கம்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தும். உங்களை எப்போதும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் உணர்த்துங்கள்.
(9 / 11)
நான் இங்கு உனக்கு உதவுவதற்காக இருக்கிறேன் தண்டனை கொடுக்க அல்ல - உங்கள் குழந்தையிடம் உங்களின் நோக்கம் அவர்களை வழிநடத்துவது மட்டுமே என்பதை தெளிவாகக் கூறுங்கள். அவர்களுக்கு ஆதரவு தந்து அவர்களின் தவறுகளை திருத்த உதவுவதாக உறுதி கொடுங்கள். அவர்களுக்கு தண்டனை தருவது உங்களின் நோக்கம் அல்ல என்பதை உறுதியாகக் கூறுங்கள். இது உங்களுக்கு அச்சத்தை குறைக்கும். எதிர்ப்பையும் குறைத்து, உங்களை நன்முறையில் வழிகாட்ட தூண்டும்.
(10 / 11)
இதை சரியாக்க நாம் என்ன செய்யவேண்டும்? - உங்கள் பொறுப்பு என்னவென்பதை உங்கள் குழந்தைகளுக்கு பேசி புரியவையுங்கள். அவர்களின் குறைகளை எப்படி அவர்கள் தீர்க்க முடியும் என்பதை கற்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இது அவர்களுக்கு பொறுப்பை உணர்த்துகிறது. திருந்தி வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.
(11 / 11)
எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும், ஆனால் நீ உன் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் - உங்கள் குழந்தையின் நடவடிக்கைகளை அவர்களிடம் இருந்து பிரித்துவிடுங்கள். அவர்களுக்கு அன்பு மற்றும் ஆதரவும் தாருங்கள். சில நடவடிக்கைகள், ஏற்க முடியாதவை என்பதை அவர்களுக்கு தெளிவாக உணர்த்திவிடுங்கள். இது அவர்கள் உணர்ந்துகொள்ள உதவும். அவர்களைப்பிடிக்கும், அவர்களின் நடவடிக்கைகள் தான் பிடிக்காது என்பதை அவர்களுக்கு அழுத்தமாகக் கூறிவிடவேண்டும்.
மற்ற கேலரிக்கள்