தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Parenting Tips Does Your Child Ask Curious Questions So Know This First

Parenting Tips : ஆர்வத்தில் கேள்விகளால் துளைத்தெடுக்கும் குழந்தைகளின் பெற்றோரா? எனில் இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!

Mar 03, 2024 03:25 PM IST Priyadarshini R
Mar 03, 2024 03:25 PM , IST

  • Parenting Tips : உங்கள் குழந்தை ஆர்வத்தில் கேள்விகள் கேட்டு துளைக்கிறார்களா? எனில் இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!

ஆர்வத்தை வளர்த்தெடுக்க வேண்டும் - உங்கள் குழந்தைகள் ஆர்வத்தில் கேள்விகள் கேட்டு துளைத்து எடுக்கும் குழந்தைகள் என்றால், அவர்களை வளர்ப்பதற்கு உங்களுக்கு பொறுமை வேண்டும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் கிரியேட்டிவிட்டியை வளர்தெடுக்க வேண்டும். அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும். இதன் மூலம் நீங்கள் குழந்தைகளை நன்முறையில் வளர்த்தெடுக்கலாம்.

(1 / 9)

பொறுமையாக கவனிக்க வேண்டும் - உங்கள் குழந்தைகள் கேள்விகள் கேட்கும்போது, பொறுமையாக, முழுமையாக கவனிக்க வேண்டும். நீங்கள் பொறுமையாக கவனிப்பதே அவர்களின் ஆர்வத்தை தூண்டும். அவர்களை ஊக்கப்படுத்தும். நீங்கள் அவர்களை மதிக்கிறீர்கள் என்ற உணர்வைத்தரும்.

(2 / 9)

அவர்களின் ஆர்வத்தை ஊக்குவியுங்கள் - உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை அவர்கள் தொடர நீங்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு புத்தகங்கள் வாங்குவது, அவர்களை பரிசோதனைகள் செய்ய வைப்பது மற்றும் அவர்களின் ஆர்வத்தையொட்டிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது என அவர்களின் கற்றலை தூண்டும் விதமாக செயல்பட வைக்க வேண்டும்.

(3 / 9)

பதில்களை குறையுங்கள் - உங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு நேரடியாக பதில்களை கொடுப்பதற்கு மாறாக பதில்களை அவர்களே கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள். அவர்கள் தானாவே பதில் கண்டுபிடிக்கும்போது நிறைய கற்றுக்கொள்கிறார்கள். இது அவர்களின் ஆராயும் குணத்தையும், சிந்தனைத்திறனையும் வளர்த்தெடுக்கும்.

(4 / 9)

கேள்விகள் கேளுங்கள் - அவர்களிடம் நிறைய கேள்விகள் கேளுங்கள். அதன்மூலம் அவர்களின் சிந்தனைகளை தூண்டுங்கள். இந்த நுட்பங்கள் அவர்களுக்கு ஆழ்ந்து சிந்திக்க உதவும். அவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்க்கும்.

(5 / 9)

வாய்ப்புக்களை உருவாக்குங்கள் - அவர்கள் ஆய்வுசெய்யும் மற்றும் கற்கும், செயல்களை அவர்களுக்கு வகுத்துகொடுங்கள். அது இயற்கையில் ஒரு நடை அல்லது சிறிய அறிவியல் ஆய்வு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தாங்களாகவே ஆராய்ந்து கற்றுக்கொள்வது மதிப்பு மிக்கது.

(6 / 9)

வளங்களை பயன்படுத்துவது - நூலகம், மியூசியம் மற்றும் கல்வி வலைதளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, அதில் உள்ளவற்றை கற்க கற்றுக்கொடுக்க வேண்டும். அதில் கிடைக்கும் தகவல்கள் அவர்களின் ஆர்வத்தை நிறைவேற்றும். அவர்களுக்கு புதிய யோசனைகள் மற்றும் பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

(7 / 9)

எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும் - அவர்களுக்கு நேரத்தின் அருமையை உணர்த்த வேண்டும். அவர்கள் கேள்விகளின் அற்புதத்தையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆர்வத்தை அவர்கள் அறிந்துகொள்ளும் சரியான நேரத்தில் அதை கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம்.

(8 / 9)

அவர்கள் கற்ற நற்பழக்கங்களை கடைபிடிக்க ஊக்குவியுங்கள் - குழந்தைகள் கற்கும் நற்பழக்கவழக்கங்களை கடைபிடிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் கண்டுபிடித்தவை குறித்து உரையாடுங்கள். அது அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும். அவர்களுக்கு தேவையான தகவல்கள் பெறுவதற்கும் தூண்டும்.

(9 / 9)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்