Parenting Tips : குழந்தைகளின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? அவர்களை அறிவாளிகளாக்கும் வழிகள் இதோ!
- Parenting Tips : இந்த பரபரப்பான உலகில், குழந்தைகளின் மனஆரோக்கியத்தை வளர்த்தெடுப்பது என்பது அவர்களின் முழு வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம். எதிர்காலத்தில் அவர்கள் சாதனைபுரிவதற்கு அது காரணமாகிறது. இந்த திறன்களை வளர்த்தெடுப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
- Parenting Tips : இந்த பரபரப்பான உலகில், குழந்தைகளின் மனஆரோக்கியத்தை வளர்த்தெடுப்பது என்பது அவர்களின் முழு வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம். எதிர்காலத்தில் அவர்கள் சாதனைபுரிவதற்கு அது காரணமாகிறது. இந்த திறன்களை வளர்த்தெடுப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
(1 / 10)
திறந்த உரையாடலை ஊக்குவிக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு உதவுங்கள். அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையானவற்றை செய்யுங்கள். தடைகளை கடந்து அவர்கள் ஓட உதவுங்கள்.
(2 / 10)
உங்கள் குழந்தைகள் பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்க்க ஊக்குவியுங்கள். கிரிட்டிக்கல் சிந்தனைகளை வளர்த்தெடுப்பதையும், கிரியேட்விட்டியையும் வளர்த்தெடுங்கள்.
(3 / 10)
உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக்கும் வழிகள் தெரிந்திருப்பது அவசியம். இது அவர்களுக்கு நேர்மறை சிந்தனைகளை வளர்த்தெடுக்கும்.
(4 / 10)
விளையாடுவது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெளியே அழைத்துச் செல்வது என அவர்களுக்கு வெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுங்கள். குடும்ப நண்பர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து ஒன்றாக பழகி, நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் வாழவேண்டும். அதுவும், குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவும்.
(5 / 10)
உடல் மற்றும் மனம் இரண்டின் உறவை புரிந்துகொண்டு, அங்கீகரித்து, மேலும் உடற்பயிற்சியை ஊக்குவித்து, அவர்களின் மன பலம் மற்றும் திறன்களை அதிகரிக்க உதவவேண்டும். தினசரி உடற்பயிற்சி குழந்தைகளுக்கு, மன உணர்வுகளை கையாள உதவுகிறது.
(6 / 10)
உங்கள் குழந்தைகளை போட்டிகளில் பங்கேற்வும், விளையாடுகளில் கலந்துகொள்ளவும் ஊக்கப்படுத்துங்கள். அது அவர்கள் புதிய உச்சத்தை எட்டுவதற்கு உதவும். சவால்களை எதிர்கொள்ளும்போது, அவர்கள் ஓரிடத்தில் ஏற்கும் திறனை அதிகரிக்கும்.
(7 / 10)
உங்கள் குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் செயல்களை தனியாக செய்ய அனுமதியுங்கள். அவர்களை தவறுகளில் இருந்து கற்கவும், பொறுப்புள்ளவர்களாகவும் வளர்த்தெடுங்கள்.
(8 / 10)
அவர்களின் நற்செயல்களுக்காக அவர்களை பாராட்டுவதன் முலம், அவர்களின் பாராட்டுக்கள் மற்றும் நன்றியுடன் இருப்பதை கற்றுக்கொடுங்கள்.
(9 / 10)
உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஒருவரின் அடிப்படை தேவை. அதற்கு ஆரோக்கிய உணவு, போதிய உறக்கம் மற்றும் அடிக்கடி உடற்பயிற்சி என ஆரோக்கிய பழக்கவழக்கங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
மற்ற கேலரிக்கள்