தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips : கவனம் தாய்மார்களே! மகன்கள் தங்கள் அம்மாக்களிடம் இருந்து இதைத்தான் கற்கிறார்கள்!

Parenting Tips : கவனம் தாய்மார்களே! மகன்கள் தங்கள் அம்மாக்களிடம் இருந்து இதைத்தான் கற்கிறார்கள்!

Jun 30, 2024 10:07 AM IST Priyadarshini R
Jun 30, 2024 10:07 AM , IST

  • Parenting Tips : கவனம் தாய்மார்களே! மகன்கள் தங்கள் அம்மாக்களிடம் இருந்து இதைத்தான் கற்கிறார்கள்!

மகன்கள் தங்கள் அம்மாக்களிடம் இருந்து எண்ணற்ற விஷயங்களை கற்கிறார்கள். அதில் சில எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஆண் குழந்தைகள், தனிப்பட்ட சுகாதாரம், தாங்கள் இருக்கும் இடத்தை பராமரிப்பது மற்றும் ஆரோக்கியமாக சாப்பிடுவதை தங்கள் தாயிடம் இருந்துதான் கற்கிறார்கள். இந்த பாடங்கள் உங்கள் குழந்தைகளின் நடத்தைகளை வடிவமைக்கிறது. அவர்களை பெரியவர்களாக்கவும், அவர்கள் வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய மதிப்பீடுகளை கற்றுக்கொடுக்கவும் செய்கிறது.

(1 / 11)

மரியாதை - குழந்தைகள் அனைவரையும் மதித்து நடக்க வேண்டும் என்பதை தனது தாயிடம் இருந்துதான் கற்கிறான். அவர்களின் பாலினம் கடந்து, அம்மாக்கள் மற்றவர்களை நடத்தும் மரியாதையான விதங்களைப் பார்த்து மற்றவர்களை எவ்வாறு மரியாதையுடன் நடத்தவேண்டும் என்பதை மகன்கள் தனது அம்மாக்களிடம் இருந்துதான் கற்கிறார்கள். 

(2 / 11)

அனுதாபம் - அம்மாக்கள் தனது ஆண் குழந்தைகள் அனுதாபத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள உதவுகிறார்கள். அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி, இரக்க உணர்வையும், உணர்வு ரீதியாக நாம் எப்படி முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.

(3 / 11)

தனிப்பட்ட சுகாதாரம் - குழந்தை முதல், அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது கைகளை கழுவுவது ஆகட்டும் அல்லது பற்களை தினமும் துலக்கவேண்டும் என்பதாகட்டுத், சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவது ஆகட்டும், இவையனைத்தும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

(4 / 11)

தான் சார்ந்த இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது - தாங்கள் சார்ந்துள்ள இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்று அம்மாக்கள் தங்களின் குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறார்கள்.அவர்களின் அறையை குப்பையின்றி வைத்துக்கொள்வதாகட்டும் அல்லது பள்ளிப் பாடங்களை கவனிப்பது முதல் திட்டமிடுதல், தேவையான வேலைகளுக்கு அட்டவணை போடுவது மற்றும் பொறுப்பு மற்றும் திறனை வளர்த்துக்கொள்வது வரை அவர்கள் தங்கள் அம்மாக்களிடம் இருந்தே இத்தனை வேலைகளையும் கற்கிறார்கள்.

(5 / 11)

சமையல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் - பெரும்பாலான அம்மாக்கள் தங்களின் சமையல் திறன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறித்த அறிவை தங்களின் மகன்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களை சுதந்திரமானவர்களாக்குகிறார்கள். இதனால் அவர்களின் சமையல் திறன் அதிகரிக்கிறது. மேலும் அவர்கள் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை செய்யவும் ஏதுவாகிறது.

(6 / 11)

பொருளாதார பொறுப்புகள் - மகன்களுக்கு அம்மாக்கள்தான் பொருளாதார மேலாண்மை, பட்ஜெட் போடுவது மற்றும் சேமித்தல் அவசியம் ஆகியவை குறித்து கற்றுக்கொடுக்கிறார்கள். எனவே சுதந்திரமாக அவர்கள் பணம் செலவழிக்க அவர்கள் அடித்தளம் அமைப்பதன் மூலம் மகன்கள், புத்திசாலித்தனமாக பணம் செலவழிக்கும் பழக்கத்துக்கு வித்திடுகிறார்கள். 

(7 / 11)

தொடர்புகொள்ளும் திறன்கள் - தங்கள் மகன்களின் தொடர்புகொள்ளும் திறனை அதிகரிப்பதில் அம்மாக்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அம்மாக்கள்தான், தாங்கள் கூறும் கருத்துக்களை எப்படி தெளிவாகக் கூறவேண்டும், கூர்மையாக கவனிக்கவேண்டும் மற்றும் அமைதியாக பிரச்னைகளை தீர்க்கவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார்கள்.

(8 / 11)

மீண்டெழும் திறன் - பின்னடைவுகளில் இருந்து எப்படி மீண்டெழவேண்டும் என்று அம்மாக்கள்தான் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். அதற்கு உதாரணமாக தாங்களே வாழ்ந்து காட்டுகிறார்கள். சவால்களை எதிர்கொள்கிறார்கள், நேர்மறையாக நடக்கிறார்கள். இதன்மூலம் குழந்தைகளை சிறந்த மீண்டெழும் திறன் கொண்டவர்களாக ஒரு தாய்தான் வளர்த்தெடுக்கிறார்கள்.

(9 / 11)

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - அம்மாக்கள் தான் தங்களுடைய மகன்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் அதை தவிர்க்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து கற்றுக்கொடுகிறார்கள். இயற்கையை கொண்டாட தனது மகன்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். இந்த பூமியை ஆரோக்கியமானதாக்க அவர்கள் கழிவை குறைக்க வேண்டும் என்பதை தன்னுடை ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள்.

(10 / 11)

சுய கவனம் - தங்களின் மீது அக்கறை கொள்வது எப்படீயென்று ஆண்குழந்தைகள் அம்மாக்கள் தான் கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்கள் உடற்பயிற்சிகள், மனதை அமைதிப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் மனஆரோக்கிய பழக்கங்கள் என அனைத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.

(11 / 11)

மற்ற கேலரிக்கள்