Top 10 Parenting Tips : கண்டிப்பான பெற்றோரா நீங்கள்? எனில் இந்த 10 தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள்!
- Top 10 Parenting Tips : கண்டிப்பான பெற்றோரா நீங்கள்? எனில் இந்த 10 தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள்!
- Top 10 Parenting Tips : கண்டிப்பான பெற்றோரா நீங்கள்? எனில் இந்த 10 தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள்!
(1 / 11)
உங்கள் குழந்தைகளுக்கு சரியான முறையில் பெற்றோராக இருப்பது - பேரன்டிங் என்பது சவாலான ஒன்று. ஒவ்வொரு பெற்றோரும், தன்னம்பிக்கை நிறைந்த குழந்தைகளை வளர்க்கவேணடும். அதேநேரத்தில் அவர்கள் சூழலுக்கு ஏற்றவர்களாகவும், சில பொதுவான பழக்கங்களை பின்பற்றுபவர்களாகவும் இருக்கவேண்டும். பெற்றோர் செய்யும் சில தவறுகள் குழந்தைகளை பாதித்து விடுகிறது. நீங்கள் செய்யும் டாப் 10 தவறுகள் இவைதான், உங்கள் குழந்தையின் ஆழ்ந்த தன்னம்பிக்கையையே அழித்துவிடுகிறது.
(2 / 11)
அதிக பாதுகாப்பு - உங்கள் குழந்தைகளை அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாப்பது அவர்கள் தாங்களாகவே பிரச்னைகளை சந்தித்து அதில் இருந்து மீண்டு எழும் திறனையும், பிரச்னைகளை தீர்க்கும் திறனையும் குறைத்துவிடுகிறது. எனவே உங்கள் குழந்தைகள் சவால்களை சந்திக்வும், அதிலிருந்து மீண்டு தன்னம்பிக்கையையும், அவர்களின் திறனையும் வளர்த்துக்கொள்ள உதவுங்கள்.
(3 / 11)
திருத்தாமல் விமர்சிப்பது - உங்கள் குழந்தைகளை தொடர்ந்து விமர்சித்துக்கொண்டே இருப்பது, குறிப்பாக தனிப்பட்ட அவர்களின் குணங்களை விமர்சிப்பது குழந்தைகளின் சுயமதிப்பை பாதிக்கிறது. எனவே அவர்களுக்கு சரியான ஃபீட்பேக்கை கொடுத்த, அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் உங்கள் குழந்தைகளின் குணாதிசயங்களை விமர்சிக்காமல் அவர்களின் அவர்கள் திருத்திக்கொள்ள வழியமைத்துக்கொடுங்கள்.
(4 / 11)
மற்றவர்களுடன் ஒப்பீடு - தொடர்ந்து மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் உடன் பிறந்தவர்களுடனோ அல்லது அவர்களின் தோழர்களுடனோ ஒப்பிடும்போது, அவர்கள் தங்களுக்கு ஏதோ குறை உள்ளது என்று எண்ணிக்கொள்கிறார்கள். எனவே அவர்களின் தனிப்பட்ட திறமைகளை கொண்டாடுங்கள். அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவியுங்கள். போட்டியை அல்ல.
(5 / 11)
சுதந்திரமின்மை - குழந்தையின் வாழ்வில், அவர்களின் சுதந்திரத்தை தடுத்து ஒவ்வொரு சிறு அசைவையும் தடுப்பது மிகவும் தவறு. அவர்களுக்கு வயது அடிப்படையில் பொறுப்புக்களை வழங்கவேண்டும். அவர்கள் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்கவேண்டும். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.
(6 / 11)
உண்மையற்ற எதிர்பார்ப்புகள் - உங்கள் குழந்தைகளை அவர்கள் விரும்பாத செயல்களில் ஈடுபடுத்தி அவர்களுக்கு தோல்வியையும், விரக்தியையும் தருவது. எனவே அவர்களுக்கு பிடித்த விஷயங்களில் அவர்களை ஈடுபடச்செய்யும், எட்ட முடிந்த இலக்குகளை நிர்ணயித்து, அவர்களுக்கு வெற்றிக்கனியை எட்டிப்பறிக்க உதவுங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
(7 / 11)
உணர்வு ரீதியான தேவைகளை தவிர்ப்பது - உங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மறுப்பது அவர்களை முக்கியத்துவம் இல்லாதவர்களாக மாற்றுகிறது. எனவே கவனத்துடனும், அனுதாபத்துடனும் நடந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது மறறும் அவர்கள் உணர்வு ரீதியாக மீண்டெழுவதற்கு உதவுவதும் சிறந்தது.
(8 / 11)
தேவையில்லாமல் பாராட்டுவது - உங்கள் குழந்தைகளை தேவையில்லாமல் பரராட்டுவது, அவர்களின் சுயமதிப்பை பாதிக்கம். எனவே அவர்களை நேர்மையாக பாராட்டுங்கள். அவர்களின் உண்மையான வெற்றிக்கு உதவுங்கள். இது குழந்தைகளுக்கு அவர்களின் திறன்களை வளர்க்க உதவும்.
(9 / 11)
எதிர்மறை பேச்சுக்கள் - குழந்தைகள் தங்கள் பெற்றோரையே பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் நீங்கள் எதிர்மறையாக பேசுவதை கேட்டால், அவர்களும் அதையே பேசுகிறார்கள். அவர்கள் சில சுய விமர்சனங்களையும் வைக்கிறார்கள். அவர்கள் நேர்மறையான சுயபேச்சு மறற்றும் சுய இரக்கம் கொண்டவர்களாக மாற நீங்களும் நேர்மறையாக நடந்துகொள்ளவேண்டும்.
(10 / 11)
தொடர்ச்சியின்மை - தொடர்ச்சியில்லாத விதிகள் மற்றும் சிக்கல்கள் குழப்பத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தும். எனவே அவர்களுக்கு நீடித்த, நிலைத்த எதிர்பார்த்த சூழலை உருவாக்குங்கள். தெளிவான எதிர்பார்ப்புக்களை வகுத்துக்கொள்ளங்கள். தொடர்ந்து அவற்றை பின்பற்றுங்கள்.
(11 / 11)
சமூகத்திறன்களை வளர்த்தல் - சமூகத்துடன் தொடர்புகொள்வது தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க மிகவும் தேவையான ஒன்று. எனவே வாய்ப்புகளைப் பெற ஊக்கப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகள் அவர்களுடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்திருக்க வேண்டும். அது அவர்களின் உரையாடல் திறன் மற்றும் தனிப்பட்ட திறன்களை வளர்க்க உதவும்.
மற்ற கேலரிக்கள்