Parenting Tips : கேட்டதையெல்லாம் வாங்கித்தருவது; அதிக கண்டிப்பு; சிறந்த பெற்றோராக விருப்பமா? இத படிங்க மொதல்ல!
- Parenting Tips : கேட்டதையெல்லாம் வாங்கித்தருவது; அதிக கண்டிப்பு; சிறந்த பெற்றோராக விருப்பமா? இத படிங்க மொதல்ல!
- Parenting Tips : கேட்டதையெல்லாம் வாங்கித்தருவது; அதிக கண்டிப்பு; சிறந்த பெற்றோராக விருப்பமா? இத படிங்க மொதல்ல!
(1 / 8)
சிறந்த பெற்றோராக இருப்பது எப்படி? -பெற்றோரிய பயணத்தில் ஏற்றம், இறக்கம் இரண்டும் இருக்கும். ஒவ்வொரு பெற்றோரும் தாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதை எப்போது உறுதிப்படுத்திக்கொண்டேயிருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. சிறந்த பெற்றோர் என்பவருக்கு உலகளில் எந்த விதியும் வகுக்கப்படவில்லை. எந்த வழிமுறைகளும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இங்கு எவ்வித பிரத்யேக ஃபார்முலாவும் இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ள சில வழிகாட்டுதல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் சூழல்களை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் குழந்தைகளை வளர்க்க உதவும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
(2 / 8)
ஒரே மாதிரி சீரான தொடர் பாதையில் பயணிப்பது - நீங்கள் ஒரு சிறந்த பெற்றோராக வேண்டுமெனில் நீங்கள் ஒரே மாதிரி சீரான பாதையில் தொடர்ந்து பயணிக்கவேண்டும். குழந்தைகளுக்கு பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். என்ன எதிர்பார்ப்பு அவர்களின் மேல் உள்ளது என்பதை தெரியப்படுத்தவேண்டும்.குழந்தைகள் உளவியல் ஆய்விதழ்களில் வெளியான கட்டுரைகள், இதுபோன்ற சீரான நடவடிக்கைகளை கடைபிடிக்கும்போது, குழந்தைகள் உணர்வு ரீதியாக சிறப்பாக இருக்கிறார்கள் என்று என்பதை குறிப்பிடுகின்றன.
எனவே அவர்களுக்கு தெளிவான விதிகளை வகுத்துவிட்டு, அதை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கவேண்டும். படுக்கை நேரம், வீட்டுப்பாடம், வீட்டு வேலை என அவர்கள் செய்யவேண்டிய வேலைகளையும், நேரத்தையும் குறித்துவிட்டு, அவர்கள் அந்த நேரத்தில் அதை செய்வதையும் உறுதிப்படுத்தவேண்டும். இது அவர்களுக்கு அவர்களின் எல்லைகளை புரிந்துகொள்ளவும், பாதுகாப்பு உணர்வை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.
(3 / 8)
விளைவுகளை அறிதல் - குழந்தைகளின் ஒவ்வொரு செயல்களும் ஒவ்வொரு விளைவை ஏற்படுத்தும் என்பது குழந்தைகளுக்கு தெரிந்திருக்கவேண்டும். எனவே அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை நடவடிக்கைகள், இரண்டுக்கும் உள்ள விளைவுகளை அவர்கள் அறிந்திருக்கவேண்டும். குழந்தைகளுக்கு தங்கள் செயல்களின் விளைவுகள் தெரிந்திருக்கும்போது, அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்கிறார்கள். எனவே விளைவுகள் நல்லதாக இருக்க குழந்தைகளின் நடவடிக்கைகளும் நல்லதாகவே இருக்கவேண்டும்.
(4 / 8)
முன்னேற தேர்வுகள் - குழந்தைகள் முன்னேறுவதற்கு தேர்வுகளை தருவது, அவர்களுக்கு சுதந்திரத்தையும், முடிவெடுக்கும் திறனையும் அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப தேர்வுகள் செய்ய அனுமதிக்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கை வளரவும், கட்டுப்பாடுகளை அவர்களே வகுத்துக்கொள்ளவும் உதவவேண்டும். அவர்கள் என்ன உடைகளை உடுத்தவேண்டும் அல்லது என்ன உணவு சாப்பிடவேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற தேர்வுகள் அவர்களுக்கு கொடுக்கப்படும்போது, அவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன் அதிகரிக்கும். அவர்கள் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கும்.
(5 / 8)
தொடர்பு கொள்வது மற்றும் உணர்வுகளை பகிர்தல் - உரையாடல் மற்றும் தொடர்புகொள்வது, இரண்டும் பெற்றோர் – குழந்தைகள் உறவில் வலுவான பிணைப்பை ஏற்படுத்த மிகவும் அவசியமாகிறது. எனவே அவர்களை நன்றாக கவனிக்கவேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். அது அவர்களின் வளர்ச்சியில் முக்கிய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. பெற்றோர்களால் புரிந்துகொள்ளப்படும்போதும், அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்போதும், குழந்தைகள் தங்களின் பிரச்னைகளை திறந்த மனதுடன் வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகிறது. எனவே குழந்தைகளுடன் வழக்கமான உரையாடலை வலுப்படுத்தும்போது, அவர்கள் தங்களின் உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
(6 / 8)
நிபந்தனையற்ற அன்பும், ஆதரவும் - ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பு மற்றும் ஆதரவும் மிகவும் அவசியம். அவர்களின் சாதனைகள் மற்றும் நடத்தைகளைக் கடந்த இந்த அன்பும், ஆதரவும் நிபந்தனைகளற்றதாக இருக்கவேண்டும். தங்கள் பெற்றோரிடம் இருந்து நிபந்தனையற்ற அன்பைப் பெறும் குழந்தைகளுக்கு அதிக தன்னம்பிக்கையும், சிறந்த மனஆரோக்கியமும் இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அன்பை வார்த்தைகள், செயல்கள் மற்றும் தரமான நேரத்தை ஒன்றாக செலவிடுவது என வெளிப்படுத்துங்கள். அவர்களின் வெற்றிகளை கொண்டாடுங்கள். தோல்விகளின் போது உடனிருங்கள். அவர்கள் எப்போதும் கொண்டாடப்படுவார்கள் மற்றும் மதிக்கப்படுவார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருங்கள்.
(7 / 8)
நேர்மறை நடத்தை - குழந்தைகள் தங்களின் பெற்றோரையே பின்பற்றுகிறார்கள். நேர்மறையான நாம் நடந்துகொள்வது என்பது அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் சக்தி வாய்ந்த வழிகளுள் ஒன்று. குழந்தைகள் அவர்கள் பெற்றோரின் நடவடிக்கைகள் மற்றும் செயல்களையே பின்பற்றுகிறார்கள், அது நேர்மறையானதோ, எதிர்மறையானதோ, எதுவாக இருப்பிணும் அவர்கள் அதை பின்பற்றுகிறார்கள் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அவர்களிடம் அன்பு, அனுதாபம், நேர்மையான நடத்தை என உங்களின் அன்றாட நடவடிக்கைகளில் கடைபிடிப்பதை நீங்கள் அவர்களுக்கு உணர்த்துங்கள். அதுகுறித்து உரையாடலும் நடத்துங்கள். அவர்களுக்கு மனஅழுத்தத்தை கையாளும் வழிகளை கற்றுக்கொடுங்கள். பிரச்னைகளை அமைதியான தீர்த்துக்கொள்ள உதவுங்கள். அவர்கள் பிற்காலத்தில் இந்த நடத்தைகளையே பின்பற்றுவார்கள்.
(8 / 8)
சுதந்திரமான மற்றும் பொறுப்பான நடத்தைகள் - குழந்தைகளை சுதந்திரம் மற்றும் பொறுப்புள்ளவர்களாக இருக்க அனுமதிப்பது, அவர்களை இளமை காலத்துக்கு தயார்படுத்துகிறது. அவர்களுக்கு வயதுக்கு ஏற்ப பொறுப்புகள் மற்றும் பணிகளை வழங்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நல்லது. அவை வீட்டு வேலைகள், பாத்திரம் துலக்குவது, உணவு தயாரிப்பது என இருக்கவேண்டும். பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு சிறந்த பிரச்னைகளை தீர்க்கும் திறனும் உள்ளதுடன், இயற்கையிலேயே அவர்களுக்கு விளைவுகள் குறித்து அறிவும் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அவர்களின் சாதனைகளை பாராட்டி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்.
மற்ற கேலரிக்கள்