Ajith Kumar: ‘16 வயசுல தொழில் வாழ்க்கைக்கு வந்தேன்.. அவ்வளவு அவமானத்த பார்த்துருக்கேன்’ - நரையோடு அலைவது ஏன்? - அஜித்!
Ajith Kumar: ‘நான் வேலைக்கு வந்து கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 16 வயதில் நான் என்னுடைய முதல் வேலையை தொடங்கினேன்’ - அஜித்குமார்
(1 / 6)
Ajith Kumar: ‘16 வயசுல தொழில் வாழ்க்கைக்கு வந்தேன்.. அவ்வளவு அவமானத்தை பார்த்துருக்கேன்.. இதையெல்லாம் கடந்து’ -அஜித்!
(2 / 6)
நடிகர் அஜித்குமாரின் கெரியரில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது மங்காத்தா. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப்படம் அவரது கெரியர் மட்டுமல்லாமல், அஜித் சினிமா வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
(3 / 6)
அந்தப்படத்தில் முழுக்க, முழுக்க வில்லனாக அஜித் வெளிப்படுத்தி இருந்த நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. அந்தப்படத்தில் அஜித் எடுத்த மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று; தன்னுடைய வெள்ளை நரையுடன் படத்தில் தோன்றுவது; கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், கொஞ்சம் பிசகினாலும் கிழவன் என்று ரசிகர்கள் சொல்லிவிட்டு சென்று விட வாய்ப்பு இருக்கிறது;
(4 / 6)
ஆனாலும், அந்த முடிவை தைரியமாக எடுத்தார் அஜித்குமார். அந்த முடிவை அவர் எடுத்ததிற்கான காரணத்தை கடந்த 11 வருடங்களுக்கு முன்னதாக விஜய் டிவி வெளியிட்டது.
(5 / 6)
அதில் வெள்ளை நரையுடன் திரையில் தோன்றுவதற்கான காரணத்தைக் கேட்ட போது, ‘ நான் வேலைக்கு வந்து கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 16 வயதில் நான் என்னுடைய முதல் வேலையை தொடங்கினேன்.
(6 / 6)
இந்த 26 வருடத்திற்கு மேலான தொழில் வாழ்க்கையில் நான் எத்தனையோ தோல்விகளை சந்தித்து இருக்கிறேன் எத்தனையோ வெற்றிகளை சந்தித்து இருக்கிறேன். எத்தனையோ அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். எத்தனையோ நம்பிக்கை துரோகங்களை சந்தித்து இருக்கிறேன். இது எல்லாம் கடந்து வந்ததுதான் இந்த வெள்ளை நரை. இதை நான் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது.' என்று கூறியிருக்கிறார்.
மற்ற கேலரிக்கள்