Ajith Kumar: ‘நேரம்தான் இங்க பணம்.. தயவுசெஞ்சு வேஸ்ட் பண்ணாதீங்க.. சாதிக்காம போயிருவீங்க பாஸ்’ - அஜித்குமார்
Ajith Kumar: நான் இந்த சினிமாத்துறைக்குள் வரும் போது எனக்கு 21 வயது. இத்தனை வருடங்கள் எப்படி போனது என்றே எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் உங்களுக்கு 35 ..40 வயது வரும் போது நீங்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்காமல் போய் இருக்கலாம். - அஜித் பேட்டி
(1 / 6)
Ajith Kumar: ‘நேரம்தான் இங்க பணம்.. தயவுசெஞ்சு வேஸ்ட் பண்ணாதீங்க.. சாதிக்காம போயிருவீங்க பாஸ்’ - அஜித்குமார்
(2 / 6)
தமிழ் சினிமாவில் தன்னுடைய விடாமுயற்சியின் மூலமாக தனக்கென தனி அடையாளத்தை பிடித்தவர் நடிகர் அஜித் குமார். இவருக்கு நேற்று பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைய காரணமாக இருப்பது என்ன? என்பது குறித்து இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
“ இன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நாம் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த உலகத்தில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
(3 / 6)
நேரம் என்பது இங்கு பணம். நாம் வாழ்வதற்கு தேவையான பணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதே நேரம் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. அந்த வாய்ப்புகளை தயவு செய்து உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள்.
!
(4 / 6)
நான் இந்த சினிமாத்துறைக்குள் வரும் போது எனக்கு 21 வயது. இத்தனை வருடங்கள் எப்படி போனது என்றே எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் உங்களுக்கு 35 ..40 வயது வரும் போது நீங்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்காமல் போய் இருக்கலாம். அப்போது வருத்தப்படாதீர்கள். இதுதான் நேரம். அந்த நேரத்தை பயன்படுத்துங்கள்.
(5 / 6)
பாசிட்டீவாக பயன்படுத்துங்கள். அதற்காக நீங்கள் ரசிகர்களாக இருக்க வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. வெறும் ரசிகராக மட்டும் இருக்காதீர்கள். தயவு செய்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
(6 / 6)
நேரம் மிகவும் விலைமதிப்பற்றது. ஒருமுறை நீங்கள் அதனை இழந்து விட்டால் அதனை மீண்டும் பெற முடியாது.” என்று பேசினார். அவர் பேசியது உண்மையும் கூட. ஆகையால் வெறும் ரசிகர்களாய் இருப்பதை தவிர்த்து, நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி அஜித் சொன்னது போல சாதனையாளராக மாற முயற்சி எடுங்கள். வாழ்த்துக்கள் அஜித் குமார்.. இன்னும் நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது.. பயணப்படுங்கள்
மற்ற கேலரிக்கள்