Ajith Kumar: ‘நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் கண் கூடா பார்த்தவங்க’ - ஷாலினி குறித்து நெகிழ்ந்த அஜித்குமார்
Ajith Kumar: ஒவ்வொரு படத்தினுடைய வெற்றியும் தோல்வியும் எங்களை மிகவும் பாதிக்கும். அது மனரீதியாக, எமோஷனல் ரீதியாக என எல்லா வழிகளிலும் எங்களை வந்தடையும்.
(1 / 6)
Ajith Kumar: நடிகர் அஜித்குமாருக்கு நேற்றைய தினம் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. பல்வேறு தோல்விகளை, அவமானங்களை கடந்து இவ்வளவு பெரிய சாதனையை படைத்திருக்கும் அஜித்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தோல்விகளின் போது அதை தான் எப்படி கையாள்வேன் என்பது குறித்து அஜித் கடந்த 11 வருடங்களுக்கு விஜய் டிவிக்கு பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலம்.
(2 / 6)
இது குறித்து அவர் பேசும் போது, ‘ஒரு திரைப்படம் வெற்றிபெறும் பொழுது, அதில் நடித்த கதாநாயகனுக்கு அதிகப்படியான புகழ் கிடைப்பது போல, படம் தோல்வி அடையும் போது, அந்த நடிகருக்கு அதிகப்படியான விமர்சனமும் வரும்.
(3 / 6)
வெற்றியும் தோல்வியும்
ஒவ்வொரு படத்தினுடைய வெற்றியும் தோல்வியும் எங்களை மிகவும் பாதிக்கும். அது மனரீதியாக, எமோஷனல் ரீதியாக என எல்லா வழிகளிலும் எங்களை வந்தடையும்.
(4 / 6)
ஒரு படம் தோல்வியடையும் பொழுதோ அல்லது அந்த படம் நினைத்த அளவு வெற்றி அடையாத போதோ, அது குறித்தான கவலையை நான் என்னுடைய அப்பா, அம்மா அண்ணன் உள்ளிட்டோரிடம் பகிர்வேன். குறிப்பாக, என்னுடைய இரண்டாவது தூணாக இருக்கக்கூடிய என்னுடைய மனைவி ஷாலினியிடம் பகிர்வேன்.
(5 / 6)
என்னுடைய கல்யாணத்திற்கு பிறகு நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் அவர் கண்கூடாக பார்த்திருக்கிறார். அவர் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட் என்று தான் கூறுவேன். அவரும் சினிமா துறையில் இருப்பதால் அதுவும் எனக்கு கூடுதல் பலமாக இருந்திருக்கிறது.
(6 / 6)
கணவராக மாறும்போது
நீங்கள் ஒரு வாலிபராக இருப்பதற்கும் ஒரு கணவனாக மாறுவதற்குமிடையே நிறைய வித்தியாசம் இருக்கின்றன. நீங்கள் திருமணமான பின்னர் உங்களுடைய எண்ண ஓட்டங்கள் முற்றிலுமாக மாறுபடும்; காரணம் உங்களுக்கு அதிக பொறுப்பு வந்துவிடும். அது அனைத்தும் எனக்கு உதவிகரமாக இருந்தது. சில தவறான முடிவுகளும் எடுத்து இருக்கிறேன் அதற்கான விலையையும் நான் கொடுத்திருக்கிறேன்.’ என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்