தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மது குடிப்பதால் மட்டும் ஆண்டுக்கு 26 லட்சம் மரணங்கள் - அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரம்!

மது குடிப்பதால் மட்டும் ஆண்டுக்கு 26 லட்சம் மரணங்கள் - அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரம்!

Jun 26, 2024 06:15 PM IST Karthikeyan S
Jun 26, 2024 06:15 PM , IST

  • Alcohol and Drug used deaths: மது மற்றும் போதைப் பொருட்களால் மரணம் அடைபவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான் என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஆண்டுதோறும் 32 லட்சம் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

(1 / 8)

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 'மது, உடல்நலம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் கோளாறுகள்' என்ற பெயரில் உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

(2 / 8)

அந்த அறிக்கையில், மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஆண்டுதோறும் 26 லட்சம் பேர் மரணமடைவதாகவும், அதில் 24 லட்சம் பேர் ஆண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(3 / 8)

உலகில் ஆண்டுதோறும் உயிரிழக்கும் மக்களில் 4.7 சதவீதம் பேர் மதுவால் இறப்பதாகவும், அதில் 6 லட்சம் பேர் மற்ற போதைப் பொருள்களால் இறப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(4 / 8)

ஒரு லிட்டர் மது அருந்துவதால் ஏற்படும் இறப்பு விகிதம் என்பது குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் அதிகமாகவும், அதிக வருமானம் உள்ள நாடுகளில் குறைவாகவும் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

(5 / 8)

கடந்த 2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் ஆல்கஹால் காரணமாக ஏற்பட்ட மொத்த  இறப்புகளில், 16 லட்சம் இறப்புகள் தொற்றாத நோய்களால் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 4,74,000 இறப்புகள் இருதய நோய்களாலும், 4,01,000 மரணங்கள் புற்றுநோயாலும் ஏற்பட்டுள்ளது.

(6 / 8)

மதுவால் ஏற்படும் மரணங்களில் 20 முதல் 39 வயதுடையவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(7 / 8)

(8 / 8)

மற்ற கேலரிக்கள்