Oscars 2024: ஓபன்ஹெய்மர் வெற்றி, ஜான் சினா நிர்வாண லுக்..! 96வது ஆஸ்கர் நிகழ்வின் சிறந்த, உணர்ச்சி மிகுந்த தருணங்கள்
- 96வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடந்த சிறந்த, மோசமான தருணங்களை பற்றி பார்க்கலாம்.
- 96வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடந்த சிறந்த, மோசமான தருணங்களை பற்றி பார்க்கலாம்.
(1 / 7)
ஆஸ்கர் 2024 நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கவர்ந்த பல்வேறு தருணங்கள், ஏமாற்றமளித்த நிகழ்வு என கலவையாக நடந்து முடிந்தது. உருக்கமான பேச்சுக்கள், சர்ப்ரைஸ் அளிக்கும் வெற்றிகள் என பல்வேறு உணர்வு மிக்க தருணங்கள் நிரம்பியிருந்தன
(2 / 7)
டாவின் ஜாய் ராண்டால்ஃப்ஸ் சிறந்த துணை நடிகையாக வென்ற ஆஸ்கர் 2024 நிகழ்ச்சியில் சிறந்த தருணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தி ஹோல்டோவர்ஸ் படத்துக்காக விருது வென்ற பிறகு அவர் உணர்ச்சிகரமாக பேசியதை ஒட்டு மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டை தெரிவித்தது. (AFP)
(3 / 7)
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன்ஹெய்மர் படம் 7 பிரிவுகளில் விருதுகளை வென்றது. சிறப்பான சினிமா அனுபவத்தை தந்து சிறந்த படத்துக்கான விருதை இந்த படம் வென்றிருப்பது அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தியது. இந்த படத்தின் வெற்றியையும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர் (AFP)
(4 / 7)
ஹாலிவுட் நடிகை ஜெண்டயா அணிந்திருந்த ஆடை புதுமையான ட்ரெண்ட், பேஷனை முன்னிருத்துவதாக இருந்தது. சிவப்பு கம்பள வரவேற்பில் பலரால் பேசப்பட்ட லுக்காக இருந்ததுடன், புதுமையான ஸ்டைலாக இருந்ததாகவும், ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் செல்வாக்கை பெற்றதாகவும் கூறப்படுகிறது(AFP)
(5 / 7)
கடந்த ஆண்டில் தங்களது உயிரை நீத்த பழம்பெரும் நடிகர்கள், திரைப்பட பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களது நினைவை போற்றும் விதமாகவும் அமைந்திருந்த தருணம் மிகவும் உணர்ச்சி மிக்கதாக இருந்தது. அவர்களை பற்றிய நாஸ்டால்ஜியா பேச்சுகள், சினிமாவில் அவர்கள் அளித்த பங்களிப்பு ஆஸ்கர் 2024 நிகழ்ச்சியில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது (AP)
(6 / 7)
தொகுப்பாளர் ஜிம் கெம்மலுடன் இணைந்து சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை வழங்கும்போது ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான ஜான் சினா ஆஸ்கார் மேடையில் நிர்வாணமாக தோன்றி ஷாக் கொடுத்தார்
(7 / 7)
புவர் திங்ஸ் படத்துக்காக ஹோலி வாடிங்டனுக்கு, சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை வழங்கிய ஜான் சினா. நிர்வாணமாக ஆஸ்கர் மேடையில் நுழைந்த ஜான் சினா, வெற்றியாளர் பெயர் அடங்கிய அட்டையை வைத்து தனது ஆண்குறியை மறைத்தவாறு வந்திருந்தார். வெற்றியாளரை அறிவிப்பதற்கு முன்னர் நிகழ்ச்சி குழுவினர் உதவியுடன் அவருக்கு அவசரமாக பட்டு அங்கி ஒன்று அளிக்கப்பட அதை அணிந்தார். அதன் பின்னர் விருது வெற்றியாளரை அறிவித்து அவருக்கு விருதையும் தன் கைகளால் கொடுத்தார்.
மற்ற கேலரிக்கள்