OPPO Reno11 Series: ஆப்போவின் ரெனோ 11 சீரஸ்..! விலை, சலுகை, கேமரா வசதி முதல் அனைத்து விஷயங்களும் இதோ!
ஓப்போ இந்தியா ரினோ 11 ப்ரோ 5ஜி, ரினோ 11 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் மேம்பட்ட கேமரா தொழில்நுட்பம், சக்திவாய்ந்த செயல்திறன், புதுமையான ColorOS 14 ஹைலைட்டான விஷயங்களாக உள்ளன. அத்துடன் ஹைப்பர்டோன் இமேஜ் எஞ்சினுடன் தனித்துவமான பயனாளர் அனுபவத்தை தருகிறது.
(1 / 7)
ஓப்போ ரெனோ 5ஜி சீரிஸ்: இந்த போன் ஜனவரி 18ஆம் தேதியிலும், ரெனோ 11 5ஜி போன்கள் ஜனவரி 25ஆம் தேதியில் இருந்தும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. ஓப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி போன் விலை ரூ. 39,999 எனவும், ரெனோ 11 5ஜி போன் ரூ. 29,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் ஹைபர்டோன் இமேஜ் எஞ்சின், பிஎச்இ, SUPERVOOC TM, டிரின்ட்டி எஞ்சின் போன்ற மேம்பட்ட அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
(OPPO)(2 / 7)
ரெனோ 11 சீரஸ் போன்கள் டீடெய்லான புகைப்படங்கள் எடுப்பதற்கு ஹைபர டோன் இமேஜ் எஞ்சினை பயன்படுத்த வலியுறுத்துகிறது. இந்த சாதனத்தில் ப்ரோ மோட், உயர் ரக கேமரா ஹார்டுவேர், தனித்துவம் மிக்க போர்ட்ரெய்ட் புகைப்பட அம்சங்கள் போன்ற கட்டுபாடுகளை பயனாளர்களுக்கு வழங்குகிறது
(OPPO)(3 / 7)
(4 / 7)
டிஸ்ப்ளே மற்றும் செயல்திறன்: ரெனோ 11 ப்ரோ 5ஜி, 3.1 GHz MediaTek Dimensity 8200 சிப், 120Hz 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. ரெனா 11 போனும் இதேபோன்ற டிசைனில், octa-core MediaTek Dimensity 7050 SoCஇல் இயங்குவதுடன், 120Hz AMOLED டிஸ்ப்ளேயை கொண்டிருக்கிறது
(5 / 7)
பேட்டரி: இந்த இரண்டு சாதனங்களும் பிஎச்இ தொழில்நுட்பத்துடன் கூடிய பேட்டரி ஆயுள் காலத்துடன் உள்ளது. நான்கு ஆண்டுகள் வரை இதன் சார்ஜிங் ஆயுள்காலம் இருக்கும் என கூறப்படுகிறது. ரெனோ 11 ப்ரோ 5ஜி போன் 4600mAh பேட்டரியுடனும், 80W SUPERVOOC சார்ஜிங் அம்சத்தையும் கொண்டுள்ளது. ரெனோ 11 போன் 5000mAh பேட்டரி மற்றும் 67W SUPERVOOC சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது
(OPPO)(6 / 7)
ColorOS 14 மற்றும் கூடுதல் அம்சம்: ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 இல் இயங்குகிறது. ரெனோ 11 சீரிஸ் AI செயல்திறனை வழங்குகிறது. இதில் இன்ப்ரா ரெட் ரிமோட், லிங்க் பூஸ்ட், ஃபைல் டாக், ஸ்மார்ட் டச் போன்ற பல அம்சங்கள் உள்ளன. 28 செயலிகள் வரை எந்த சிரமமும் இன்றி இயங்குவதை ஆப்பரேட்டிங் சிஸ்டம் உறுதி செய்கிறது
(OPPO)(7 / 7)
மற்ற கேலரிக்கள்