தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  On This Day Sachin 241 Runs Without Cover Drive Match Completed And India Drew The Test Series 1-1

HT Cricket Special: ஸ்டீவ் வாக் கடைசி போட்டி! சொன்னதை செய்த சச்சின் - ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த இந்தியா

Jan 06, 2024 06:30 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 06, 2024 06:30 AM , IST

  • ஆஸ்திரேலியா அணியின் சக்சஸ்ஃபுல் கேப்டனாக இருந்து வந்த ஸ்டீவ் வாக் விளையாடிய கடைசி போட்டியில் அவரால் காலத்துக்கும் மறக்க முடியாத சம்பவத்தை இந்திய அணி செய்தது. குறிப்பாக அதற்கு உரமிட்டவர் சச்சின் டென்டுல்கர்.

"நான் அவுட்சைடு ஆஃப் ஸ்டம் வீசிய பந்தில் இரண்டு முறை அவுட்டாகிவிட்டேன். எனவே இந்த போட்டியில் அந்த பந்துகளை ஆடப்போவதில்லை. கவர்சிலும் அடிக்கபோவதில்லை" என கூறி, சொன்னதை செய்தும் காட்டினார் சச்சின் டென்டுல்கர். 241 ரன்கள் எடுத்தபோதிலும் ஒரு ஷாட் கூட கவர்ஸ் திசையில் அடிக்கவில்லை. 

(1 / 6)

2003-04 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இந்தியா அந்நிய மண்ணிலும் சாதிக்க தயாராகிவிட்டது என்பதை எடுத்துரைக்கும் தொடராகவே அமைந்தது. கங்குலி தலைமையில் 4 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்தியா சமன் செய்தது. ஆக்ரோஷமிக்க ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அலட்டிக்கொள்ளாத ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலேயே இந்தியா வெற்றிகரமாக தொடரை முடிக்க காரணமாக அமைந்தது

(2 / 6)

இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் சச்சினின் விக்கெட்டை இரண்டு பொறி வைத்து தூக்கினார்கள் ஆஸ்திரேலியர்கள். இதை புரிந்து கொண்ட சச்சின், எங்கு பவுலிங் செய்தால் எனக்கு பலவீனம் என கருதுகிறீர்களோ அதை ரன்களாக மாற்றுகிறேன் என கங்கணம் கட்டிக்கொண்டு விளையாடினார். "அவுட்சைடு ஆஃப்சைடு பந்து சச்சினுக்கு பலவீனம் என்பதால் அதற்கேற்ப பீல்ட் செட் செய்து பந்து வீசினோம். எங்களது திட்டத்தை புரிந்து சச்சின் கடைசி வரை கவர்ஸில் ஆடவே இல்லை" என ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் வாக் போட்டி முடிந்தவுடன் பிரமிப்பாக கூறினார்

(3 / 6)

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது போட்டியில் உலகமே வியந்து பார்க்கும் விதமாக இப்படியொரு சம்பவத்தை செய்தார் சச்சின் டென்டுல்கர். சச்சின் கிரிக்கெட் கேரியரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டி ஜனவரி 2 முதல் 6 வரை நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் 241,  இரண்டாவது  இன்னிங்ஸில் 60 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்

(4 / 6)

சச்சின் அடித்த ரன்களின் திசையை காட்டும் வேகன் வீல், அவரது பேவரிட் ஷாட்டான கவர் ட்ரைவ் இல்லாமலும், கவர்சில் ரன்களே இல்லாமலும் விந்தையாக அமைந்திருக்கும். சச்சினின் இந்த ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் ஒழுக்கமான இன்னிங்ஸ் என போற்றப்படுகிறது

(5 / 6)

இந்தியாவின் தெறிக்கவிடும் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் வாக் கடைசி போட்டியில், அணி வீரர்களால் அவருக்கு வெற்றியை பரிசாக தர முடியாமல் போனது

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்