Anil Kumble: 30 ஆண்டுகளுக்கு முன் அனில் கும்ப்ளே நிகழ்த்திய சாதனை! இந்தியா கோப்பை வென்ற அந்த தருணம்
- இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்பின் ஜாம்பவானாக திகழ்ந்த முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே, 30 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 27ஆம் தேதியான இதே நாளில்தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் என தனது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார்.
- இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்பின் ஜாம்பவானாக திகழ்ந்த முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே, 30 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 27ஆம் தேதியான இதே நாளில்தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் என தனது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார்.
(1 / 8)
இந்திய, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பரிக்கா, இலங்கை, ஜிம்பாப்வே என ஐந்து நாடுகள் பங்கேற்று ஹீரோ கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டியது. பைனலில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதற்கு காரணமாக இருந்தது அனில் கும்ப்ளே தான்(Sportstar)
(2 / 8)
முகமது அசாருதீன் கேப்டனாக செயல்பட்ட இந்த போட்டியில் உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில்தேவும் அணியில் இடம்பிடித்திருந்தார். இந்திய கிரிக்கெட்டில் மிக சிறந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது(Sportstar)
(3 / 8)
1983 உலகக் கோப்பை வென்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வென்ற மிகப் பெரிய கோப்பைகளில் ஒன்றாக இது அமைந்தது. துர்தர்ஷனை விடுத்து முதல் முறையாக ஸ்டார் டிவியில் ஒளிபரப்பான கிரிக்கெட் தொடராக ஹீரோ கோப்பை அமைந்ததது (Sportstar)
(4 / 8)
இந்த போட்டியில் 6 ஓவர்கள் வீசிய அனில் கும்ப்ளே 2 மெய்டன் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஸ்பின்னர் என்ற பெருமையை பெற்றார்
(5 / 8)
ஒரு நாள் போன்று டெஸ்ட் போட்டியிலும் முதல் முறையாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார் அனில் கும்ப்ளே. பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போட்டியில் கும்ப்ளே இதனை நிகழ்த்தினார்
(6 / 8)
கும்ப்ளேவின் 6 விக்கெட் சாதனையை அடுத்த 10 ஆண்டுகள் கழித்து வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெக்ரா சமன் செய்தார். 2003 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
(7 / 8)
ஆஷிஷ் நெக்ராவுக்கு பின் 20 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பை 2023 தொடரில் முகமது ஷமி, நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் கும்ப்ளேவின் 30 ஆண்டு கால சாதனை, நெக்ராவின் 20 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் (ICC Twitter)
மற்ற கேலரிக்கள்