Transit Of Venus 2024:வரும் மே 19ல் ரிஷப ராசியில் பால் காய்ச்சும் சுக்கிரன்.. துட்டு பொங்கப்போகும் ராசிகள்
Transit Of Venus 2024: ரிஷப ராசிக்கு சுக்கிரன் மாறி சிலருக்கு நிதிப் பலன்களை வழங்குகிறார். இந்த 3 ராசிக்காரர்கள் முதலீடு மற்றும் வேலைகள் மூலம் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். இந்த ராசிகள் குறித்து அறிந்துகொள்வோம்.
(1 / 6)
இந்து நாட்காட்டியின் படி, சுக்கிர பகவான், மே 19அன்று ரிஷப ராசியில் நுழைகிறார். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். சுக்கிரன் ரிஷப ராசியில் நுழையும் போது, ஒரே நேரத்தில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையும் நடக்கும். ஏனெனில், ரிஷப ராசியில் முன்பே குருவின் பார்வை வீசிவருகிறது.
(2 / 6)
ரிஷபம்: சுக்கிரனின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம், முதலீடுகள் ஆகியவற்றைத் தரக்கூடும். பணியிடத்தில் ஊதிய உயர்வு, புதிய வருமான ஆதாரங்கள் ஆகியவற்றுக்கான வழிகள் பிறக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். காதல் திருமணங்களும் வெற்றியடையும். முன்பின் தெரியாதவர்களின் வார்த்தைகளால் பிரச்னைகள் வரலாம். அதனை நம்பினால் மனநலன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, தவறான காரியங்களைச் செய்யாதீர்கள். இல்லையெனில் நிதி இழப்பு ஏற்படும்.
(3 / 6)
கடகம்: சுக்கிர பகவான் மற்றும் குருவின் சேர்க்கையால் கடக ராசிக்காரர்களுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும், உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த ராசி ராசியினருக்கு திருமண உறவில் இருந்த பிரச்னைகள் நீங்கி நன்மை கிடைக்கும், குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் அதிகாரிகளின் உதவி கிட்டும்
(4 / 6)
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி நன்றாக இருக்கும். வேலையில் வெற்றியும், வீட்டில் அமைதியும் நிலவத் தொடங்கும், கணவன் - மனைவியுடனான சச்சரவுகள் தீரும், ஆரோக்கியம் மேம்படும், பழைய நோய்கள் நீங்கும், சில வேலைகளுக்காக வெளிநாடு செல்ல நேரிடும்.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மற்ற கேலரிக்கள்