Chengalpattu Accident : அதிகாலையில் நடந்த கோகம்.. செங்கல்பட்டை உலுக்கிய கோர விபத்து.. 4 பேர் பரிதாபமாக பலி!
- Chengalpattu Accident : செங்கல்பட்டு அருகே பழமத்தூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- Chengalpattu Accident : செங்கல்பட்டு அருகே பழமத்தூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
(1 / 5)
தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஒன்று, ஆம்னி பேருந்து மற்றும் அரசு பேருந்து மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த 4 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
(2 / 5)
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
(3 / 5)
முதலில் லாரி வேகமாக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது மோதி உள்ளது. அரசு சொகுசு பேருந்து மீது லாரி மோதிய நிலையில் அந்த சொகுசு பேருந்து மீது அரசு சாதாரண பேருந்து பின்பக்கம் மோதி உள்ளது. இதையடுத்து லாரியின் பின் பக்கம் தனியார் ஆம்னி பேருந்து மோதி உள்ளது.
(4 / 5)
காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மற்ற கேலரிக்கள்