அஜீரணம், சரும பராமரிப்பு, மூட்டு வலி தீர்வு மற்றும் பல.. தொப்புளில் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அஜீரணம், சரும பராமரிப்பு, மூட்டு வலி தீர்வு மற்றும் பல.. தொப்புளில் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

அஜீரணம், சரும பராமரிப்பு, மூட்டு வலி தீர்வு மற்றும் பல.. தொப்புளில் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Updated Apr 13, 2025 08:44 PM IST Muthu Vinayagam Kosalairaman
Updated Apr 13, 2025 08:44 PM IST

Oiling In Belly Button benefits: தினமும் தொப்புளில் எண்ணெய் தடவினால், பல்வேறு உடல்நல பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். தொப்புளில் எள் எண்ணெயுடன், ஆமணக்கு எண்ணெய் போன்ற எண்ணெய் உள்பட எந்தெந்த எண்ணெய்களை தடவினால் உடல் ஆரோக்கியத்தில் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்த

தொப்புளில் எண்ணெய் தடவுவதால் ஏற்படும் நன்மைகள்: உடல் ஆரோக்கியத்தில் எண்ணெய் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கிறது. சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாப்பது முதல் எண்ணெயை உடல் பாகங்களில் தடவுவதால் பல நன்மைகளை பெறலாம். குறிப்பாக தொப்புளில் தினமும் எண்ணெய் தடவினால், வீக்கம் முதல் அஜீரணம் வரையிலான பிரச்னைகளில் இருந்து விடுபடமால். தொப்புள் உடலின் உள்ளே உள்ள பல நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. தொப்புளில் எண்ணெய் தடவுவதன் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

(1 / 7)

அஜீரணத்திலிருந்து நிவாரணம்: அஜீரண கோளாறு பிரச்னை இருப்பவர்கள், தொப்புளில் ஆமணக்கு எண்ணெயைப் பூச வேண்டும். ஆயுர்வேதத்தின்படி, தொப்புளில் ஆமணக்கு எண்ணெயைப் பூசுவது மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது

(2 / 7)

கருவுறுதலை அதிகரிக்க உதவுகிறது: தொப்புள், தாய்க்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் இடையே நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கருவுறுதலை அதிகரிக்க அல்லது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினால், தினமும் தொப்புளில் எண்ணெய் தடவவும். இது மாதவிடாய் பிரச்னைகளையும் நீக்க உதவும்

(3 / 7)

முகப்பரு மற்றும் பளபளப்பான சருமம்: தொப்புளில் எண்ணெய் தடவுவதன் மூலம் சரும பளபளப்பை பெறலாம். முகப்பரு பிரச்னை இருப்பவர்கள், தேங்காய் எண்ணெயை தினமும் தொப்புளில் தடவினால் உரிய பலன் பெறலாம்

(4 / 7)

மூட்டு வலிக்கு தீர்வு: தொப்புளில் எண்ணெய் தடவுவதால் ஏற்படும் நன்மைகளுக்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை என்றாலும், பண்டைய மருத்துவத்தில் இந்த முறை எப்போதும் நல்லது என்று கருதப்பட்டது. மூட்டு வலி பிரச்னை இருப்பவர்கள், தொப்புளில் எள் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணெய் மூட்டு வலியின் தாக்கத்தை  குறைக்க உதவும் என கூறப்படுகிறது

(5 / 7)

வயதான எதிர்ப்பு விளைவு: தோலில் உள்ள சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளின் பிரச்னையை தடுத்து நிறுத்த விரும்புகிறவர்கள், தினமும் தொப்புளில் பாதாம் எண்ணெயைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். இந்த எண்ணெய் தோலில் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் வளர்வதைத் தடுக்கிறது. உள்ளே இருந்து ஈரப்பதமாக்குவதன் மூலம் வயதான தோற்றத்தின் விளைவைப் தடுக்கிறது

(6 / 7)

தசை பிடிப்புக்கு நிவாரணம்: தொப்புளில் தினமும் ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துவது தசை பிடிப்புகளுக்கு நன்மை பயக்கும். குறிப்பாக  பெண்களுக்க நன்மை தருவதாக இருக்கும். இந்த எண்ணெய் நரம்புகளைத் தளர்த்தி உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது

(7 / 7)

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்