தைராய்டு பிரச்னை முதல் நுரையிரல் ஆரோக்கியம் வரை..சுத்தமான காற்றில் இருக்கும் ஊட்டச்சத்துகளும், நன்மைகளும் இதோ
- Clean air: ஃபரஷ் காற்று நமக்கு ஆக்ஸிஜனை மட்டும் வழங்குவதில்லை. மேலும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. உடலுக்கு பல வைட்டமின்கள் காற்றில் இருந்து கிடைக்கின்றன. இந்த வைட்டமின்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமானதாகும்
- Clean air: ஃபரஷ் காற்று நமக்கு ஆக்ஸிஜனை மட்டும் வழங்குவதில்லை. மேலும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. உடலுக்கு பல வைட்டமின்கள் காற்றில் இருந்து கிடைக்கின்றன. இந்த வைட்டமின்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமானதாகும்
(1 / 9)
ஃபரஷ் அல்லது சுத்தமான காற்றில் இடம்பிடித்திருக்கும் ஊட்டச்சத்துகள், அவற்றால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கலாம்
(2 / 9)
விஞ்ஞானிகள் வயிற்றில் உள்ள ஊட்டச் சத்துக்களை இரைப்பைச் சத்து (கேஸ்ட்ரோ நுட்ரியன்ட்) என்று அழைப்பது போல, புதிய காற்றில் உள்ள சத்துக்கள் ஏரோனூட்ரியன்கள் என்று அழைக்கிறார்கள்
(3 / 9)
ஏரோனூட்ரியன்களில் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை இரத்தத்துக்கு முக்கிய கூறுகளாக செயல்படுகின்றன. உதாரணமாக இந்த லிஸ்டில் அயோடின், துத்தநாகம், மாங்கனீசு போன்றவை அடங்குகின்றன
(4 / 9)
அயோடின் தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது. இதேபோல், துத்தநாகம் நமது மூளையின் ஒரு முக்கிய அங்கமாகும். மேலும், மாங்கனீசு நமது எலும்புகள் மற்றும் திசுக்களின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுகிறது
(5 / 9)
ஆக்சிஜனும் இந்த ஏரோனூட்ரியன்களின் ஒரு பகுதி என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனெனில் அது உடலுக்குள் செல்லவில்லை என்றால், இரத்தத்தில் உள்ள ஹீம் கலவையை உற்பத்தி செய்ய முடியாது. இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவும் கணிசமாக குறையும்
(6 / 9)
இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது, ஆக்ஸிஜன் பல்வேறு உறுப்புகளை சென்றடையாது. இதன் விளைவாக, அவை இறக்கத் தொடங்குகின்றன
(7 / 9)
நமது நுரையீரலில் பல மென்மையான இரத்த நாளங்கள் உள்ளன. இதன் மூலம், ஆக்ஸிஜன் மெதுவாக இரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது. ஏரோனூட்ரியன்களும் அதே வழியில் இரத்தத்தில் உறிஞ்சப்படுகின்றன.
(8 / 9)
காற்றில் நிறைய மாசுக்கள் இருந்தால், அவை நுரையீரலுக்குள் நுழைந்து இரத்தத்தில் உறிஞ்சப்படுகின்றன. உதாரணமாக.. புகைப்பிடிப்பவர்களின் இரத்தத்தில் நிகோடின் உறிஞ்சப்படுகிறது
மற்ற கேலரிக்கள்