சரியாக விமர்சிக்கத் தெரியல.. ஹிட்டான சில படங்களில் பேசப்பட்ட கருத்துக்கள் உடன்பாடு இருக்காது.. புலம்பிய பிரேம்,நித்திலன்
- சினிமா எக்ஸ்பிரஸ் யூட்யூப் சேனல் நடத்திய இயக்குநர்கள் ரவுண்ட் டேபிள் உரையாடலில் இயக்குநர்களான நித்திலன், ஞானவேல், வினோத் ராஜ், பிரேம் குமார் ஆகியோர் தற்போது நடக்கும் திரைவிமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். அந்தப் பேட்டி வைரல் ஆகியுள்ளது.
- சினிமா எக்ஸ்பிரஸ் யூட்யூப் சேனல் நடத்திய இயக்குநர்கள் ரவுண்ட் டேபிள் உரையாடலில் இயக்குநர்களான நித்திலன், ஞானவேல், வினோத் ராஜ், பிரேம் குமார் ஆகியோர் தற்போது நடக்கும் திரைவிமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். அந்தப் பேட்டி வைரல் ஆகியுள்ளது.
(1 / 6)
அதில் ஒவ்வொருவர் பேசியதும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது.இயக்குநர் நித்திலன்: சினிமாவோடு மக்கள் அப்படியே கலந்து இருக்காங்க. அப்பா, அம்மாவைத் தவிர்த்து நாம் செலிபிரேட் செய்ய ஒரு ஹீரோ வேணும் என்ற மனநிலை இருக்குதுன்னு நினைக்கிறேன். எனக்கு பிடிச்ச ஆள் இவர். ஆகவே, போட்டியாக நடிக்குறவங்களை தவறாகப் பேசுறது. படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே டிசாஸ்டர்(Disaster) அப்படின்னு போடுறது. பணம் கொடுத்து படத்தை தப்பாக எழுதச்சொல்றது எல்லாம் இருக்கு. இதையெல்லாம் தாண்டி படம் சுவாரஸ்யமாக கொடுக்கணும் என்பது என் கருத்து.ஆன்லைனில் கழுவி ஊத்தப்பட்ட ஒரு படம் பெரிய ஹிட்டாயிருக்கு. அதேபோல், நன்கு விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியும் ஆகி இருக்கு. சிலநேரம், சரியான கருத்தினை சொல்லியிருக்கமாட்டாங்க. சுவாரஸ்யமாக எடுத்திருப்பாங்க. பார்த்தால் படம் ஹிட்டாகிடும். இதை எப்படி ஏத்துக்குறதுன்னு தெரியல. எனக்கு நன்கு ஹிட்டான சில படங்களில் பேசப்பட்ட கருத்துக்கள் சுத்தமாக உடன்பாடு இருக்காது.
(2 / 6)
இயக்குநர் டி.ஜே. ஞானவேல்: நீங்கள் தாராளமாக கொண்டாடுங்க. ரசிகராக இருங்க. நான் அவரை ரசிக்குறேன். பார்த்தாலுமே பிடிக்கும். ஆனால், அவர் கொலைசெய்தாலும் தப்புகிடையாதுன்னு சொல்லக்கூடாதுன்னு நினைக்குறேன். உங்களுடைய அட்டாச்மென்ட்ன்னு ஒன்று இருக்குல, அது எந்த எக்ஸ்ட்ரீம் வரை என்பதுதான் என் கேள்வி. ஒரு நடிகர் இன்னொரு நடிகருடைய படங்களைக் குறைக்கிறதோ கூட்டுறதோ, அது நடிகர் சம்பந்தப்பட்டது இல்லை. படத்தில் பல டெக்னீசியன் வேலைபார்த்து இருக்காங்க. சின்னசின்ன கேரக்டர் நடிச்சவங்க இருக்காங்க. அந்த வாய்ப்புக்காக 10 வருஷம், 15 வருஷம் காத்திருக்கவங்க இருக்காங்க. அந்தப் படம் கீழே விழுந்தால் அவங்க கீழே விழுந்தாங்கன்னு தான் அர்த்தம்.
(3 / 6)
இயக்குநர் வினோத் ராஜ்: கொட்டுக்காளி மாதிரியான படத்துக்கு நீங்க என்ன சொல்லமுடியும். எஸ்.கே அண்ணன் வேற படம் தயாரிக்கப்போயிடுவார். சூரி அண்ணன் வேற படத்தில் நடிக்கப்போயிடுவார். அடுத்து வேறு புரொடியூசர் இப்படிப்பட்ட படங்களைப் பண்ணனும்ல. சிவகார்த்திகேயன் அண்ணனே தொடர்ந்து படம் தயாரிச்சிட்டு இருக்கமுடியாது. இது எல்லாபேருக்கும் தான் சேர்த்து சொல்றேன். விமர்சனங்கள் வந்து சரியாக இருக்கு, தவறாக இருக்குன்னு சொல்ல வரல. அதை மேம்படுத்தணும். ஒரு படைப்பாளி என்னையும் சேர்த்து அது மேம்படுத்தணும்ல. படம் பார்த்து வெளியே வருகிறவர்களைப் பார்த்து,ஃபர்ஸ்ட் ஆஃப் எப்படி இருக்கு, செகண்ட் ஆஃப் லேக் ஆக இருக்காமே எனக்கேட்கிறது, படம் கனெக்ட் ஆகாதவங்க நின்று பதில் சொல்லிட்டுப்போற சிச்சுவேசன் இருக்குல. அது மேம்படணும்.
(4 / 6)
இயக்குநர் பிரேம் குமார்: ‘சினிமா சார்ந்து தான் விமர்சனங்கள் பண்ற தொழில் இருக்கு. அந்த சினிமாவை சார்ந்து தான் சம்பாதிக்குறீங்க. சாப்பிடுறீங்க. உங்கள் குடும்பம் இயங்குறது, உங்கள் புள்ளை படிக்குறது எல்லாம் அதை வைச்சுத்தான். அதை அழிக்கணும் என்கிற வகையில் உள்ளே வர்றது ஒரு பெரிய மனநோய் அது. உலகளவில்போய் அங்கீகாரம் பெற்ற திரைப்படம் சமீபத்தில் கொட்டுக்காளியைத் தவிர வேறு ஏதாவது இருக்கா, சட்டுன்னு சொல்லுங்க. அதை எப்படி தூக்கி கொண்டாடி இருக்கணும். நான் சொல்றது விமர்சகர்களை சொல்றேன். மலையாளம் படம் மாதிரி இல்லன்னு குறைசொல்லமட்டும் தெரியுது’.
(5 / 6)
'ஒரு உலக தரத்தோடு வந்த படத்தை புரிந்துகொண்டு சரியாக விமர்சிக்கத்தெரியல. அதுதான் உண்மை. ஒரு படத்தைப் பாராட்டணும் என்றால், அதைப் பற்றிய குறைந்தபட்ச அறிவு வேணும். அதை சரியா செய்திருந்தீங்க என்றால் கொட்டுக்காளி மாதிரி 10 படங்கள் வர முயற்சிகள் நடந்திருக்கும். மேக்ஸிமம் கலெக்ஷன் கிடைக்கும் முதல் மூன்று நாட்களில் படத்தை அடிக்குறதுதான், இவங்க ரிவியூன்னு நினைச்சிட்டு இருக்காங்க.என் படத்தில் நடந்தது. இரண்டாவது வாரம், ரிவியூவர்ஸால் நான் இந்தப் படத்தை மிஸ் செய்துட்டேன் மக்கள் வருத்தப்படுறாங்க. தெலுங்கில் படத்தை மீடியாவுக்குப் போட்டுகாட்டினதும், படத்தில் பிடித்ததை போய் மேடையில் பத்து பத்திரிகையாளர்கள் பேசுறாங்க'
(6 / 6)
‘’விமர்சனம் தாண்டி தவறான தகவல்களை சொல்வதைப் பழக்கமாக வைத்திருக்காங்க. 96ல் நான் பயன்படுத்திய பாடல்களுக்கு நான் ரைட்ஸ் வாங்கலைன்னு சொல்லிட்டு, இந்த வார்த்தையில் திட்டுவேன் அப்படின்னு சொல்றார். அவருக்கு போன் பண்ணி யார்கிட்ட விசாரிச்சிங்கன்னு கேட்டால் இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் இப்படி யார்கிட்டேயும் போனே செய்யல. அவருக்குத் தெரியுது நாங்க ரைட்ஸ் வாங்கியிருக்கோம்ன்னு. இது என்னவென்றால் தொடர்ச்சியாக நெகட்டிவ்வை தொடர்ச்சியாக சொல்லிட்டே இருக்குறது. இது பார்க்குறவங்களுக்கு உண்மைன்னு தோணும். இதுவும் நடக்குது’’ என பேசியிருந்தனர்.''
மற்ற கேலரிக்கள்