தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nia Raids: தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. அதிகாலை முதலே பரபரப்பு!

NIA Raids: தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. அதிகாலை முதலே பரபரப்பு!

Jun 30, 2024 08:51 AM IST Karthikeyan S
Jun 30, 2024 08:51 AM , IST

  • NIA Raids: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

(1 / 5)

புதுக்கோட்டை மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதிகாலையில் இருந்தே சோதனை நடைபெற்று வருகிறது.

(2 / 5)

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் வீடுகளில் இந்த சோதனையான நடைபெற்று வருகிறது.

(3 / 5)

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஜ்புர் தகர் என்ற அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.

(4 / 5)

இது குறித்து விரிவான தகவல்கள் சோதனை நிறைவடைந்ததும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தரப்பில் இருந்து வெளியிடப்படும் என தெரிகிறது. அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்