புத்தாண்டு கொண்டாடத் தயாரா? இதோ உங்கள் கொண்டாட்டத்தை சிறப்பாக்க சில டிப்ஸ்கள்! பக்கா லிஸ்ட் ரெடி!
- 2025 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ளது. உலகின் பல மூலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டில் இனி எல்லாம் புது நன்மைகளாக நடக்க வேண்டும் அனைவரும் விரும்புவார்கள். உங்களது வீடுகளில் புத்தாண்டை கொண்டாட சில டிப்ஸ்கள்.
- 2025 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ளது. உலகின் பல மூலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டில் இனி எல்லாம் புது நன்மைகளாக நடக்க வேண்டும் அனைவரும் விரும்புவார்கள். உங்களது வீடுகளில் புத்தாண்டை கொண்டாட சில டிப்ஸ்கள்.
(1 / 5)
புத்தாண்டு என்றாலே பட்டாசு, உணவு, மகிழ்ச்சி என வரிசையாக கூறிக் கொண்டே இருக்கலாம். ஆனால் சில நாடுகளில் புத்தாண்டு அன்று சில விளையாட்டுகளை விளையாடுகின்றனர். நீங்கள் இதனை எளிதாக சமூக வலைத் தளங்களில் இருந்து அறிந்துக் கொள்ளலாம். உங்கள் அறையை கேமிங் ஏரியாவாக மாற்ற, பிங்-பாங் சவால்கள், ஸ்டேக்கிங் கோப்பைகள் அல்லது UNO போன்ற பாரம்பரிய அட்டை கேம்கள் போன்ற பொழுதுபோக்கு கேம்களைப் விளையாடவும்.
(2 / 5)
நைட் டைம் க்ளோ பார்ட்டி: இருளில் ஒளிரும் கொண்டாட்டத்தின் சிலிர்ப்பை அனுபவிக்க இரவு நேரம் பார்ட்டி செய்யுங்கள். உங்களது வீட்டிலேயே நியான் அலங்காரங்கள், ஃப்ளோரசன்ட் விளக்குகள் மற்றும் பளபளப்பு குச்சிகளை அலங்கரிக்க பயன்படுத்தவும். மனநிலையை மேம்படுத்த, சுவையான தின்பண்டங்கள் மற்றும் பானங்களை சாப்பிடும் போது உங்களுக்குப் பிடித்த பாடல்களுக்கு நடனமாடுங்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இந்த அழகான புத்தாண்டை கொண்டாடுங்கள்.
(3 / 5)
வீட்டிற்கு விருந்தினர்களை அழைத்து அவர்களுடன் உணவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். இரவு நேர உணவு என்பதால் அதிகம் காரம் உள்ள உணவுகளையோ, உங்கள் வயிற்றை பாதிக்கும் உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். இது உங்களை ஆரோக்கியமாக இருக்க வைக்கும். விருந்தினர்கள் வீட்டிற்கு வருவதே உங்கள் மகிழ்ச்சியை இராட்டிபாக்கும்.
(4 / 5)
புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிச்சயமாக பானங்கள் இருக்கும். ஆனால் அளவுக்கு மீறிய அளவில் பானங்களை வீட்டில் வைத்திருக்க வேண்டாம். வீட்டிலேயே சுவையான கேக்குளை செய்ய முயற்சி செய்யுங்கள். இது உங்களின் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் நல்லதாக்கும். நண்பர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
மற்ற கேலரிக்கள்