Vande Bharat Special: சென்னை - நாகர்கோவில் இடையே புதிய வந்தே பாரத் ஸ்பெஷல் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
- தெற்கு ரயில்வேயின் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரத்துக்கு நான்கு முறை இயக்கப்படவுள்ளது
- தெற்கு ரயில்வேயின் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரத்துக்கு நான்கு முறை இயக்கப்படவுள்ளது
(1 / 5)
பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் கூட்டத்தை தவிரக்கவும் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
(2 / 5)
இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் 06067/06068 ஆகிய எண்களில் முறையே சென்னை எழும்பூர் - நாகர்கோவில்/ நாகர்கோவில் - சென்னை எழும்பூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
(3 / 5)
இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படுகிறது. நாகர்கோவிலுக்கு மதியம் 13.50 மணிக்கு சென்றடைகிறது. ஜூலை 11,12,13,14,18, 19,20,21 ஆகிய தேதிகளில் மொத்தம் 8 சேவைகள் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது
(4 / 5)
அதேபோல் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம்14.20 மணிக்கு புறப்படுகிறது. சென்னைக்கு இரவு 23.00 மணிக்கு வந்தடைகிறது. ஜூலை 11,12,13,14,18, 19,20,21 மொத்த 8 சேவைகள் இயக்கப்படவுள்ளது
மற்ற கேலரிக்கள்