தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Neelima Rani: ஒருத்தன் போனா இன்னொரு த்தனா..? ரொம்ப ரொம்ப தப்பு.. ஆமா 10 வயசு வித்தியாசம் தான்' - நீலிமா ராணி

Neelima rani: ஒருத்தன் போனா இன்னொரு த்தனா..? ரொம்ப ரொம்ப தப்பு.. ஆமா 10 வயசு வித்தியாசம் தான்' - நீலிமா ராணி

Jul 02, 2024 11:29 AM IST Kalyani Pandiyan S
Jul 02, 2024 11:29 AM , IST

Neelima rani: பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி தன்னுடைய கணவர் குறித்தும் இக்கால திருமண வாழ்க்கை குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்

பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி தன்னுடைய கணவர் குறித்தும், இன்றைய காலத்தில் திருமணம் எப்படி பார்க்கப்படுகிறது என்பது குறித்தும், லிட்டில் டாக்ஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.  இது குறித்து அவர் பேசும் போது," எல்லா காலக்கட்டத்திலும் என்னுடைய கணவர் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அவருடைய ஆதரவு எனக்கு எப்போதும் அபரிவிதமாக இருந்திருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தியா? இந்த காலகட்டத்தில் ஒருவருடன் நாம் பழகுகிறோம், நாளடைவில் அவருக்கும், நமக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்படும் பொழுது, அவரை விட்டுப் பிரிந்து செல்ல முடிவெடுக்கிறோம். இது ஒன்றும் தவறில்லை என்பது ரீதியாக பார்க்கப்படுகிறது. 

(1 / 6)

இந்த மாதிரியான சிந்தனைகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒருவருக்கு ஒருவர் என்று வாழ்வதெல்லாம் இப்போது கிரிஞ்ச் போல பார்க்கப்படுகிறது. இது உண்மையிலேயே மிக மிக தவறான  விஷயமாகும். நீங்கள் ஒருவருடன் பழகுகிறீர்கள். நாளடைவில் உங்களுக்கும்,   

(2 / 6)

அவருக்கும் காதல் உருவாகிறது. ஒரு கட்டத்தில் அவர்தான் உங்களது பார்ட்னர் என்று முடிவெடுக்கிறீர்கள். இப்படி நீங்கள் முடிவெடுத்து விட்டால், அதன் பின்னர் என்ன நடந்தாலும், நீங்கள் அவருடன் தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. உங்களுக்கு உரிமை இல்லைஇன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,  திருமணத்திற்குப் பிறகு, குழந்தைகள் வந்த பிறகு, நீங்கள் பிரிவை மேற்கொள்ளும் பொழுது அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையானது வேறு மாதிரியான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.    

(3 / 6)

அந்த குழந்தைகளை மகிழ்ச்சி இல்லா சூழ்நிலைக்கு தள்ள உங்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாது.நான் இங்கு பணத்தைப் பற்றி பேசவில்லை. புகழைப் பற்றி பேசவில்லை. ஒரு உயிரை நீங்கள் மகிழ்ச்சி இல்லா சூழ்நிலைக்கு தள்ள உங்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது என்றுதான் சொல்கிறேன்.  

(4 / 6)

நானே சொல்லி இருக்கிறேன்இவ்வளவு ஏன், என்னுடைய அப்பா, அம்மாவிற்கு இடையே பயங்கரமான பிரச்சினைகள் நடக்கும். ஆனாலும் அம்மா கடைசிவரை அப்பாவை தன்னுடன் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டே வந்தார். அவர்களை பார்க்கும் பொழுது இவர்கள் பிரிந்து இருந்தால், இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பார்களே என்று நினைத்ததுண்டு. ஆனால் அது சரியல்ல என்பது வயது ஆக ஆக இப்போது எனக்கு புரிகிறது. 

(5 / 6)

நானே என்னுடைய அம்மாவிடம் இப்படிப்பட்ட ஒரு தந்தை தேவையே இல்லை என்று சொல்லி இருக்கிறேன். ஆனால் அம்மா, அப்பாவின் கடைசி நொடி வரை அவருடன் தான் இருந்தார். அவர் அவரை கடைசிவரை விட்டுக் கொடுக்கவே இல்லை. என்னுடைய கணவர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர்தான் என்னை வளர்த்தார் என்று கூறலாம் நான் அவரை திருமணம் செய்து கொள்ளும் பொழுது எனக்கு 21 வயது.நான் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படியான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட எல்லாவற்றையும் அவர் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். நான் இன்று பலருக்கு உத்வேகமாக இருக்கிறேன் என்றால், அதற்கான பல்லாயிரம் மடங்கு பாசிட்டிவிட்டியை அவர் எனக்குள் புகுத்தி இருக்கிறார்.வயதானவராக அவர் இருக்கிறார். பத்து வருடங்கள் வயது வித்தியாசம் இருக்கிறது உள்ளிட்ட விவாதங்களை முன் வைக்கிறார்கள். அப்படி நாம் திருமணம் செய்து கொள்ளும் பொழுது, ஒருவர் அதிக புரிதலோடும் இன்னொருவர் குறைவான புரிதலுடன்  இருப்பார். அது மிகவும் நன்றாக இருக்கும். அது நிறைய ஆச்சரியங்களையும் கொண்டு வரும். திருமண வாழ்க்கையில் இரண்டு பேரும் அதிக புரிதலோடு இருந்தாலும் பிரச்சினை, இரண்டு பேரும் புரிதலோடு இல்லாமல் இருந்தாலும் பிரச்சினை.  ஆனால் எங்கள் விஷயத்தில் அப்படி இல்லை அதனால் அது அழகாக பேலன்ஸ் ஆகிவிட்டது" என்று பேசினார்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்