Nayanthara: “நன்றியுள்ளவளா இருப்பேன் விக்கி” - கணவரை நினைத்து நயன் உருக்கம்!
விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு நயன் தாரா எமோஷனலான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
(1 / 6)
தமிழ் சினிமாவில் சிலம்பரசனின் ‘ போடா போடி’ திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவரின் இரண்டாவது திரைப்படமான ‘நானும் ரெளடிதான்’ திரைப்படத்தில் நடிகை நயன் தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
(2 / 6)
இன்றைய தினம் விக்னேஷ் சிவன் இன்று தன்னுடைய 40 வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிலையில் தானும் தன்னுடைய கணவரும் நெருங்கி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா மிகவும் உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
(3 / 6)
இது குறித்து பதிவிட்டுள்ள நயன்தாரா, “ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் உன்னைப் பற்றி நான்நிறைய எழுத விரும்புகிறேன். நான் எழுத ஆரம்பித்தால் என்னால் சில விஷயங்களை நிறுத்திக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.
(4 / 6)
என் மீது நீ பொழிந்த அன்பிற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நம்முடைய உறவின் மீது நீ வைத்திருக்கும் மரியாதைக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். யாரும் உன்னைப்போல் இல்லை.
(5 / 6)
என்னுடைய வாழ்க்கைக்குள் நீ வந்ததற்கு மிகவும் நன்றி. என்னுடைய வாழ்க்கையை கனவாகவும், அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றியதற்கு மிகவும் நன்றி.
(6 / 6)
நீ செய்யும் எல்லாவற்றிலும் நீ சிறந்தவன். என் உயிராக இருக்கும் எல்லாவற்றிலும் நீ சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் -நயன்தாரா
மற்ற கேலரிக்கள்