Nayanthara: ஃபார்முலா ஒன் கிராண்ட் பிக்ஸில் மலைக்கா அரோரவுடன் மீட்டிங்! காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கிளிக்
- Nayanthara and Malaika Arora: ஃபார்முலா ஒன் ரேஸ் பந்தயத்தை நடிகை நயன்தாரா, பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா ஆகியோர் பார்த்து ரசித்துள்ளனர். நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் ஃபார்முலா ஒன் பந்தயத்தை காண சவுதி அரேபியா சென்றுள்ளார்
- Nayanthara and Malaika Arora: ஃபார்முலா ஒன் ரேஸ் பந்தயத்தை நடிகை நயன்தாரா, பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா ஆகியோர் பார்த்து ரசித்துள்ளனர். நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் ஃபார்முலா ஒன் பந்தயத்தை காண சவுதி அரேபியா சென்றுள்ளார்
(1 / 6)
சவுதி அரேபியாவின் ஜித்தாவில் ஃபார்முலா ஒன் ரேஸ் பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வில் சந்தித்துக்கொண்ட நயன்தாரா, மலைக்கா அரோரா ஆகியோர் பல்வேறு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்
(2 / 6)
மலைக்கா அரோரா தனது இன்ஸ்டாவில் ஜித்தாவின் 12 மணி நேரம் என குறிப்பிட்டு நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் (Instagram)
(3 / 6)
க்ரீம் கலர் ஜம் சூட் அணிந்து எஃப் ஒன் கிராண்ட் பிக்ஸ் பந்தயத்தை பார்த்து ரசித்துள்ளார் மலைக்கா அரோரா (Instagram)
(4 / 6)
கிராப்ட் ஜேக்கட்டுடன், பிரைட் மஞ்சள் நிற பேணட் சூட், தங்க நகைகள், வெள்ளை ஸ்னீக்கர்களுடன் ஸ்போர்ட்ஸ் மோட் லுக்கி்ல் இந்த கார் ரேஸை பார்த்து ரசித்துள்ளார் நயன்தாரா (Instagram)
(5 / 6)
சமீபத்தில் இன்ஸ்டாவில் விக்னேஷ் சிவனை unfollow செய்ததாகவும், அவரை விவாகரத்து செய்ய போவதாகவும் வதந்திகள் உலா வந்தன. அதை பொய்யாக்கும் விதமாக காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமாண்டிக்காக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது ஸ்டைலில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நயன்தாரா (Instagram)
மற்ற கேலரிக்கள்