Natural Scrubber: முகத்தை பொலிவாக்கும் இயற்கையான ஸ்கரப்பர்களை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
- Natural Scrubber: சந்தையில் கிடைக்கும் ஸ்கரப்பர்களை காட்டிலும், சருமத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு வீட்டில் இருந்தபடியே இயற்கையான முறையில் ஸ்கரப்பர் செய்து சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் அதனை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளலாம்

(1 / 7)
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வாரம் ஒருமுறை எக்ஸ்ஃபோலியேட் செய்வது, அதாவது சருமத்தில் உள்ள அழுக்குகளை உரிப்பது அவசியமாகிறது. சந்தையில் கிடைக்கும் ஸ்கரப்பர்களில் வேதிப்பொருள்கள் அதிகம் நிறைந்திருக்கும். எனவே அதை தவிர்த்து இயற்கையான முறையில் வீட்டிலேயே எளிதாக ஸ்கரப்பர் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
(Freepik)(2 / 7)
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் தேன், ஓட்ஸ் ஆகியவை சருமத்துக்கும் நன்மையை தருகிறது. இந்த இரண்டு கலவையும் நல்ல ஸ்கரப்பர்களாகவும் செயல்படுகிறது. இவை இரண்டையும் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து நன்கு கலந்த பின்பு முகத்தில் பூசுவதன் மூலம் இயற்கையான ஸ்கரப்பராக பயன்படுத்தலாம்
(Freepik)(3 / 7)
சரும செல்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது வாழைப்பழம். வாழைப்பழத்தில் முகத்தில் தேய்ப்பதால் சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி, ஈரப்பதமாக வைக்க உதவுகிறது
(Freepik)(4 / 7)
காபி மற்றும் பச்சை பால் ஆகியவையும் சிறந்த ஸ்கரப்பராக உள்ளது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் காபி பெரும் பங்கு வகிக்கிறது. இந்த கலவையானது முகத்துக்கு பொலிவை தருவதுடன், தோல்களில் இருக்கும் கறைகளை நீக்குகிறது
(Freepik)(5 / 7)
மோசமான சருமத்தை சரி செய்வதில் பப்பாளி பெரும் பங்கு வகிக்கிறது. பப்பாளி கூழ் சிறந்த ஸ்கரப்பராக செயல்படுகிறது. பல்வேறு சிறந்த பிராண்ட் ஸ்கரப்பர்களை காட்டிலும் சருமத்துக்கு சிறந்தவையாக திகழ்கிறது
(Freepik)(6 / 7)
மோசமான சருமத்தை சரி செய்வதில் பப்பாளி பெரும் பங்கு வகிக்கிறது. பப்பாளி கூழ் சிறந்த ஸ்கரப்பராக செயல்படுகிறது. பல்வேறு சிறந்த பிராண்ட் ஸ்கரப்பர்களை காட்டிலும் சருமத்துக்கு சிறந்தவையாக திகழ்கிறது
(Freepik)மற்ற கேலரிக்கள்