National Birds Day 2024: உலகில் தனித்துவமான, அழகியல் நிறைந்த பறவையினங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?
- உலகம் முழுவதும் எண்ணிலடங்கா அழகான பறவைகளுக்கு வீடாக இந்த பூமி உள்ளது. ஒவ்வொரு பறவைகளும் தனித்துவ அழகியலை கொண்டுள்ளது. கண்கவர் அழகுடன் கூடிய பறவைகள் சிலவற்றை பார்க்கலாம்.
- உலகம் முழுவதும் எண்ணிலடங்கா அழகான பறவைகளுக்கு வீடாக இந்த பூமி உள்ளது. ஒவ்வொரு பறவைகளும் தனித்துவ அழகியலை கொண்டுள்ளது. கண்கவர் அழகுடன் கூடிய பறவைகள் சிலவற்றை பார்க்கலாம்.
(1 / 11)
ஆண்டுதோறும் தேசிய பறவைகள் நாள் ஜனவரி 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பறவைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது(Unsplash)
(2 / 11)
போஹேமியன் வாக்ஸ்விங்: வட அமெரிக்கா மற்றும் யூரேசியாவின் வடக்குப் பகுதிகளில் காணப்படும் இந்த பறவை கண்கவர் தோற்றத்துடன் இருக்கும் நேர்த்தியான பறவையாக இருக்கும்(Unsplash)
(3 / 11)
கோல்டன் ஃபெசண்ட்: சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பறவை அதன் துடிப்பான மற்றும் வண்ணமயமான இறகுகளுக்கு பெயர் பெற்றது. சிவப்பு, தங்கம் மற்றும் நீல நிற இறகுகளின் அற்புதமான கலவையுடன் இந்த பறவை உள்ளது(Unsplash)
(4 / 11)
ஸ்கார்லெட் மக்காவ்: ஒரு விதமான பஞ்சவர்ண கிளியாக இவை கருதப்படுகிறது. ஸ்கார்லெட் மக்காவ் இனங்கள், அதன் பிரகாசமான சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் நிற இறகுகளுக்கு பெயர் பெற்றது. இது தென் அமெரிக்கா மழை காடுகளில் காணப்படுகிறது(Unsplash)
(5 / 11)
ரெஸ்ப்லளென்டென்ட் குவெட்சல்: மத்திய அமெரிக்காவில் காணப்படும் இந்த பறவைக்கு துடிப்பான பச்சை நிற இறகுகள் மற்றும் நீண்ட வால் இறகுகளும் உள்ளன(Unsplash)
(6 / 11)
கீல்-பில்ட் டக்கன்: வானிவில் பில்ட் டக்கன் என்றும் அழைக்கப்படும் இந்த பறவை மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் வெப்பமண்டல காடுகளில் காணப்படுகிறது. பார்ப்பதற்கு வண்ணமயமாகவும் மற்றும் கவர்ச்சிகரமாகவும் தோற்றமளிக்கும்(Unsplash)
(7 / 11)
மயில்: இந்தியாவின் தேசிய பறவையான மயில், இறகுகளுடன் கூடிய மிகவும் பெரிய பறவையாக உள்ளது. தெற் ஆசியாவில் அதிகமாக காணப்படும் இந்த பறவை, வீட்டு பறவையாக வளர்க்கப்படுவதால் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளது(Unsplash)
(8 / 11)
விக்டோரியா முடிசூட்டப்பட்ட புறா: நியூ கினியா நாட்டை பூர்விகமாக கொண்ட இந்த பறவை, அழகு மிக்க நீல நிற இறகுகள் மற்றும் அதன் தலையில் இறகுகளின் தனித்துவமான கிரீடத்தை கொண்டுள்ளது(Unsplash)
(9 / 11)
ஹயாசித் மக்காவ்: செந்நீல ஐவண்ணக்கிளி என்று அழைக்கப்படும் இந்த பறவை மக்காவ் இன பறவைகளில் மிகவும் பெரியதாக உள்ளது. மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்கா பகுதிகளை பூர்வீகமாக கொண்டுள்ளது(Unsplash)
(10 / 11)
உட் டக்: மர வாத்து என்று அழைக்கப்படும் இந்த பறவை பிரமிக்க வைக்கும் வண்ணமயமான, தனித்துவமான வாத்துக்களாக உள்ளது. வட அமெரிக்க பகுதியில் இந்த வாத்துகள் காணப்படுகிறது (Unsplash)
மற்ற கேலரிக்கள்