தொடங்கியது நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமண விழா! வைரலாகும் ஹல்டி போட்டோக்கள்!
- நடிகர்கள் சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா ஆகியோரின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 4ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது. இவர்களது ஹல்தி சடங்கு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர்கள் சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா ஆகியோரின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 4ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது. இவர்களது ஹல்தி சடங்கு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
(1 / 7)
திரைப் பிரபலங்கள் பலர் இவர்களது திருமணத்தில் பங்கேற்க உள்ளதால் பிரம்மாண்டமாக திருமணம் நடத்த முடிவு செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், பாரம்பரிய முறைப்படி இவர்கள் இருவரின் திருமணமும் அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் நடத்தப்பட உள்ளது.
(2 / 7)
நாக சைதன்யா, சோபிதா துலிபாலா ஆகியோரின் ஹால்டி விழா இன்று அகினேனி வீட்டில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் இரு குடும்ப உறுப்பினர்களுடன் சில நெருங்கிய நண்பர்கள் மாத்திரமே கலந்து கொண்டதாக தெரிகிறது.
(3 / 7)
இன்று வெளியான ஹல்டி புகைப்படங்களில் சோபிதா மஞ்சள் நிற சேலையில் ஒரு பெரிய பாத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் அவர் மீது தண்ணீர் மற்றும் பூக்களை ஊற்றுமாறு அந்த போட்டோ இருந்தது. அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பல சடங்குகளையும் செய்துள்ளார்.
(4 / 7)
நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமணம் நடைபெறும் அதே டிசம்பர் 4 அன்றே அகில் ஜைனப் திருமணமும் நடைபெற இருப்பதாக் ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையல்ல என நாகார்ஜூனா தெரிவித்துள்ளார்.
(5 / 7)
மேலும் இவர்களது திருமண வீடியோவை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் உரிமம் பெற்றதாகவும் தகவல் வெளியானது. அதையும் நாக சைதன்யா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாகவும் பல திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
(6 / 7)
திருமணமான 4 ஆண்டுகளுக்குப் பிறகு, சைதன்யாவும் அவரது முன்னாள் மனைவி சமந்தாவும் அக்டோபர் 2021 இல் பிரிந்தனர். அன்றிலி இருந்து சில மாதங்களுக்குப் பிறகு 2022 இல், சைதன்யா மேட் இன் ஹெவன் பட நடிகையான சோபிதாவுடன் அவரது ஹைதராபாத் வீட்டில் காணப்பட்டார்.
மற்ற கேலரிக்கள்