Musical Pillars PHOTOS: வியக்க வைக்கும் நெல்லையப்பர் கோயில் இசை தூண்கள்!
- Nellaiappar Temple: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள இசை தூண்கள் பற்றி பார்ப்போம்.
- Nellaiappar Temple: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள இசை தூண்கள் பற்றி பார்ப்போம்.
(1 / 8)
திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.
(2 / 8)
756 அடி நீளமும், 378 அடி அகலமும் கொண்ட இக்கோயில் ஆசியாவின் மிகப்பெரிய பாடல் பெற்ற சிவாலயமாக விளங்குகிறது. இந்த திருக்கோயிலில் எண்ணற்ற பல சிறப்புகளையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
(3 / 8)
சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலுக்குள் உள்ள மணி மண்டபத்தில் காணப்படும் சங்கீதத் தூண்கள் சிறப்பு பெற்றவையாகும்.
(4 / 8)
இங்குள்ள மணி மண்டபத்தின் முன்பக்கம் பெரிய தூண்கள் மண்டபத்தைத் தாங்கி நிற்க, அதைச் சுற்றி ஒலி எழுப்பக்கூடிய 48 சிறு சிறு இசை தூண்கள் காணப்படும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு இசையை எழுப்பக் கூடியவையாகும்.
(5 / 8)
இந்த ஒவ்வொரு சிறிய இசை தூண்களிலும் ஒரு சிறு குச்சியைக் கொண்டு தட்டினால் ஒவ்வொரு விதமான சங்கீத ஸ்வரங்கள் எழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம் ஆகும். இது உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாகும்.
(6 / 8)
பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும், அதை சுற்றி உள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளில் இசையை ஒலிக்கின்றன.
(7 / 8)
ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்தில் இழைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த காலத்தில் திருவிழாக்களின் போது இசைக் கலைஞர்கள் இந்த தூண்களை பயன்படுத்தியே இசைத்ததாக சொல்லப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்