Tamil News  /  Photo Gallery  /  Must Watch Kamal Haasan Movies List Of Six Movies Here

Must Watch Kamal Haasan movies: கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த கட்டாயம் பார்க்க வேண்டிய 6 படங்கள்!

Jan 23, 2024 12:35 PM IST Manigandan K T
Jan 23, 2024 12:35 PM , IST

  • கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த கட்டாயம் பார்க்க வேண்டிய 6 படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில், பார்க்க வேண்டிய குறிப்பிட்ட 6 படங்களைப் பார்ப்போம்.

(1 / 7)

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில், பார்க்க வேண்டிய குறிப்பிட்ட 6 படங்களைப் பார்ப்போம்.(@TRBRajaa)

மூன்றாம் பிறை. 1982இல் பாலு மகேந்திர இயக்கத்தில் வெளியானது. ஸ்ரீ தேவி, கமல்ஹாசன் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். ஸ்ரீதேவி-கமல் ஆகியோரின் நடிப்புக்காவும், பாடல்கள், ஒளிப்பதிவுக்காகவும் பெரிதும் பேசப்பட்ட காலத்தால் அழியாத படைப்பு மூன்றாம் பிறை.

(2 / 7)

மூன்றாம் பிறை. 1982இல் பாலு மகேந்திர இயக்கத்தில் வெளியானது. ஸ்ரீ தேவி, கமல்ஹாசன் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். ஸ்ரீதேவி-கமல் ஆகியோரின் நடிப்புக்காவும், பாடல்கள், ஒளிப்பதிவுக்காகவும் பெரிதும் பேசப்பட்ட காலத்தால் அழியாத படைப்பு மூன்றாம் பிறை.( Amazon prime)

1992 இல் வெளியான படம் தேவர் மகன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்தார் கமல் ஹாசன். பரதன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

(3 / 7)

1992 இல் வெளியான படம் தேவர் மகன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்தார் கமல் ஹாசன். பரதன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

நாயகன் 1987இல் வெளியான படம். இயக்குநர் மணி ரத்னம் இயக்கியிருந்தார். மும்பையில் தாதாவாக இருந்த தமிழர், வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்ட படமாக இந்தப் படம் அமைந்தது.

(4 / 7)

நாயகன் 1987இல் வெளியான படம். இயக்குநர் மணி ரத்னம் இயக்கியிருந்தார். மும்பையில் தாதாவாக இருந்த தமிழர், வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்ட படமாக இந்தப் படம் அமைந்தது.(amazon prime)

1989இல் வெளியான அபூர்வ சகோதரர்கள் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.மூன்று வேடங்களில் கமல்ஹாசன் நடிப்பில் அசத்திய திரைப்படம். குறிப்பாக குள்ளக் கமல் வேடம் பெரிதும் ரசித்துப் பார்க்கப்பட்டது. சங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

(5 / 7)

1989இல் வெளியான அபூர்வ சகோதரர்கள் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.மூன்று வேடங்களில் கமல்ஹாசன் நடிப்பில் அசத்திய திரைப்படம். குறிப்பாக குள்ளக் கமல் வேடம் பெரிதும் ரசித்துப் பார்க்கப்பட்டது. சங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.(Amazon prime)

சுந்தர்.சி இயக்கிய அன்பே சிவம், 2003இல் வெளியானது. விபத்தில் சிக்கி மீண்டவர் வேடத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிரட்டியிருந்தார். இவருடன் மாதவன் வரும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்கி சிரிக்க வைத்ததுடன், சிந்திக்கவும் வைத்தன.

(6 / 7)

சுந்தர்.சி இயக்கிய அன்பே சிவம், 2003இல் வெளியானது. விபத்தில் சிக்கி மீண்டவர் வேடத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிரட்டியிருந்தார். இவருடன் மாதவன் வரும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்கி சிரிக்க வைத்ததுடன், சிந்திக்கவும் வைத்தன.(bookmyshow)

இன்றைய தலைமுறையினர் பார்த்தாலும் கண் கலங்க வைக்கும் திரைப்படம். சந்தான பாரதி இயக்கியிருந்தார். 1994இல் வெளியான இந்தப் படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார் கமல். இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களுக்கு நதியின் பெயர் வைத்திருப்பார்கள். கொச்சின் ஹனீபா, பூர்ணம் விஸ்வநாதன், சுகன்யா, ஷோபனா ஆகியோரின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது. இளையராஜா இசையமைத்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப் பெற்றது.

(7 / 7)

இன்றைய தலைமுறையினர் பார்த்தாலும் கண் கலங்க வைக்கும் திரைப்படம். சந்தான பாரதி இயக்கியிருந்தார். 1994இல் வெளியான இந்தப் படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார் கமல். இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களுக்கு நதியின் பெயர் வைத்திருப்பார்கள். கொச்சின் ஹனீபா, பூர்ணம் விஸ்வநாதன், சுகன்யா, ஷோபனா ஆகியோரின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது. இளையராஜா இசையமைத்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப் பெற்றது.(Amazon prime)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்