முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம்.. ஆனால்.. வேதனையாக ஏ.ஆர் ரஹ்மான் போட்ட பதிவு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம்.. ஆனால்.. வேதனையாக ஏ.ஆர் ரஹ்மான் போட்ட பதிவு!

முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம்.. ஆனால்.. வேதனையாக ஏ.ஆர் ரஹ்மான் போட்ட பதிவு!

Nov 20, 2024 11:12 AM IST Divya Sekar
Nov 20, 2024 11:12 AM , IST

  • நாங்கள் எங்களின் முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இன்னும், இந்த சிதைவில் துண்டுகளாகிப் போன நாங்கள் மீண்டு வர முடியாமல் போனாலும், இந்த நிலைக்கான அர்த்தத்தைத் தேடுகிறோம்.

ஏ.ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா பானு, ரஹ்மானை பிரிவதாகக் கூறி விவாகரத்து முடிவை அறிவித்து இருக்கிறார். இந்நிலையில், இதை தனது எக்ஸ் தள பக்கத்தில் உறுதி செய்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தன் வேதனைகளையும் வலிகளையும் அந்தப் பதிவில் வெளிப்படுத்தி உள்ளார்.

(1 / 6)

அதில் "நாங்கள் எங்களின் முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில் துண்டுகளாகிப் போன நாங்கள் மீண்டு வர முடியாமல் போனாலும், இந்த நிலைக்கான அர்த்தத்தைத் தேடுகிறோம். நாங்கள் பலவீனமாக உள்ள இந்த நாட்களைக் கடக்கும் போது. எங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பும் மரியாதையும் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி" என ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

(2 / 6)

முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, அவரது வழக்கறிஞர் மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், “ ஏ. ஆர். ரஹ்மானுடன் பல வருடங்களாக மண வாழ்வில் இருந்த சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார்.

(3 / 6)

இந்த முடிவை அவர், அவர்களது உறவில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரச்சினையால் ஏற்பட்ட அழுத்ததிற்கு பிறகு எடுத்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகளுக்கு இடையே நிலவிய பதற்றமும், சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு சேர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

(4 / 6)

அதை இனி எதனைக்கொண்டும் இணைக்க முடியாது. சாய்ரா பானு, இந்த முடிவை வலி மற்றும் வேதனையின் வழியாகவே எடுத்திருக்கிறார். ஆகையால் இந்த நேரத்தில் அவரின் விவாகரத்து முடிவிற்கு தனிப்பட்ட பிரைவசியை அளிக்க வேண்டும்” குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

(5 / 6)

இந்த அறிக்கையை அவரது மகனும் அமீனும் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் அவர் இந்த நேரத்தில் எங்களது குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்