Movies Released Today: ‘ரஜினி.. கமல்.. கேப்டன்.. அஜித்.. டி.ஆர்.,’ இன்று ‘ஸ்பெஷல் டே’ தான்!
- November 4 ம் தேதியான இன்று, இதே நாளில் இதற்கு முன் வெளியான திரைப்படங்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
- November 4 ம் தேதியான இன்று, இதே நாளில் இதற்கு முன் வெளியான திரைப்படங்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
(1 / 7)
நவம்பர் 4 ம் தேதியான இன்று, இதே நாளில் வெளியான திரைப்படங்கள் என்ன? அவற்றின் சிறப்புகள், விபரம் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம்.
(2 / 7)
தூங்காதே தம்பி தூங்காதே: எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில், கமல், ராதா, சுலோச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம். 1983 ம் ஆண்டு இதே நாளில், ரஜினியின் தங்கமகன் படத்தோடு நேரடியாக மோதியது தூங்காதே தம்பி தூங்காதே. இன்றோடு 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
(3 / 7)
தங்கைக்கோர் கீதம்: உஷா ராஜேந்தர் தயாரிப்பில், கதை, திரைப்பதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்தையும் டி.ராஜேந்தர் செய்ய 1983 ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம். ரஜினி, கமல் படங்களுக்கு போட்டியாக களமிறங்கிய வெற்றியை பறித்த டி.ஆர்.,யின் திரைப்படம். நளினி, சிவக்குமார் உள்ளிட்டோரும் உடன் நடித்திருந்தனர். 40 ஆண்டுகளை இந்த திரைப்படமும் நிறைவு செய்கிறது.
(4 / 7)
தங்கமகன்: ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில், இளையராஜா இசையில், ரஜினிகாந்த், பூர்ணிமா உள்ளிட்டோர் நடிக்க, 1983 ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம். இன்றோடு 40 ஆண்டுகளை கடக்கும் மற்றொரு திரைப்படம். தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
(5 / 7)
வில்லன்: அஜித் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர், டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வில்லன். கே.எஸ்.ரவிக்குமார்-அஜித் கூட்டணியில் மற்றொரு வெற்றித் திரைப்படம். வித்யாசாகர் இசையில், நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தீபாவளி வசூலை அள்ளிய திரைப்படம். 2002 ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மீனா, கிரண் உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர்.
(6 / 7)
சொல்ல மறந்த கதை: அழகி வெற்றிக்குப் பின் இயக்குனர் தங்கர் பச்சானின் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பில் வந்த திரைப்படம் சொல்ல மறந்த கதை. ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஆண் ஒருவனின் பின்னணியை கொண்ட இந்த கதைக் களம் பேசப்பட்டது. வசூல் பெற்றதா என்று சொல்ல முடியாது. சேரன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருந்தார். இதுவும் தீபாவளி ரேஸில் வந்த திரைப்படம். இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
மற்ற கேலரிக்கள்