Moto G04 5G Smartphones: இத்தனை அமச்ங்கள்..! இந்தியாவின் மலிவு விலை ஸ்மார்ட்போன் - எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Moto G04 5g Smartphones: இத்தனை அமச்ங்கள்..! இந்தியாவின் மலிவு விலை ஸ்மார்ட்போன் - எவ்வளவு தெரியுமா?

Moto G04 5G Smartphones: இத்தனை அமச்ங்கள்..! இந்தியாவின் மலிவு விலை ஸ்மார்ட்போன் - எவ்வளவு தெரியுமா?

Feb 23, 2024 09:45 AM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 23, 2024 09:45 AM , IST

மோட்ரோலா நிறுவனம் இந்தியாவின் மிகவும் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட் போனாக மோட்டோ ஜி04 என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்ரைலிக் கிளாஸ் பினிஷ், 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே 90Hz ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது. நேர்த்தியான வடிவமைப்புடன் சக்தி வாய்ந்த செயல்திறனை உறுதியளிக்கிறது

இந்த போன் டிசைனை பொறுத்தவரை எடை குறைவான, ஸ்லிம் போனாக உள்ளது. 7.99மிமீ தடிமனும், 178கி எடையும் கொண்டிருக்கும் இந்த போன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் விலை ரூ. 6, 999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  8GB RAM + 128GB ஸ்டோரேஜ் விலை ரூ. 7, 999 என உள்ளது. ஆஃபர்களுடன் இதன் விலையானது ரூ. 6, 249 என உள்ளது

(1 / 5)

இந்த போன் டிசைனை பொறுத்தவரை எடை குறைவான, ஸ்லிம் போனாக உள்ளது. 7.99மிமீ தடிமனும், 178கி எடையும் கொண்டிருக்கும் இந்த போன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் விலை ரூ. 6, 999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  8GB RAM + 128GB ஸ்டோரேஜ் விலை ரூ. 7, 999 என உள்ளது. ஆஃபர்களுடன் இதன் விலையானது ரூ. 6, 249 என உள்ளது(Flipkart)

ஆழமான அனுபவத்தை தரும் டிஸ்ப்ளேயை கொண்டிருக்கும் இந்த போனில் தடையில்லா எண்டெர்டெயின்மெண்டை பயனாளர்கள் பெறலாம். பஞ்ச ஹோல் டிசைனுடன் 6.6" 90 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, பிரகாசம் அதிகபட்சமாக 537 நிட்ஸ் வரை உள்ளது. ஆடியோ தரத்தை பொறுத்தவரை டால்பி அட்மாஸ் ஸ்பீக்கரை கொண்டுள்ளது. குறைவான ஒளி வெளிச்ச சூழ்நிலையில் நைட் மோட் பார்வையை மேம்படுத்தி சிறந்த அனுபவத்தை தருகிறது

(2 / 5)

ஆழமான அனுபவத்தை தரும் டிஸ்ப்ளேயை கொண்டிருக்கும் இந்த போனில் தடையில்லா எண்டெர்டெயின்மெண்டை பயனாளர்கள் பெறலாம். பஞ்ச ஹோல் டிசைனுடன் 6.6" 90 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, பிரகாசம் அதிகபட்சமாக 537 நிட்ஸ் வரை உள்ளது. ஆடியோ தரத்தை பொறுத்தவரை டால்பி அட்மாஸ் ஸ்பீக்கரை கொண்டுள்ளது. குறைவான ஒளி வெளிச்ச சூழ்நிலையில் நைட் மோட் பார்வையை மேம்படுத்தி சிறந்த அனுபவத்தை தருகிறது(Flipkart)

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை கொண்டிருக்கும் மோட்டோ ஜி04 தனிப்பயனாக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, எளிதில் அணுக கூடிய அம்சங்களை கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பு, ஹெல்த் கனெக்ட், ப்ரைவசி அப்டேட்கள் போன்றவை பாதுகாப்பு மற்றும் டேட்டா தனிபயனாக்கத்தை உறுதி செய்கிறது 

(3 / 5)

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை கொண்டிருக்கும் மோட்டோ ஜி04 தனிப்பயனாக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, எளிதில் அணுக கூடிய அம்சங்களை கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பு, ஹெல்த் கனெக்ட், ப்ரைவசி அப்டேட்கள் போன்றவை பாதுகாப்பு மற்றும் டேட்டா தனிபயனாக்கத்தை உறுதி செய்கிறது (Flipkart)

பெர்பார்மென்ஸை பொறுத்தவரை 8GB/4GB RAM  இன்பில்டாக கொண்டிருப்பதோடு, 16GB வரை RAM அம்சத்தை மேம்படுத்திகொள்ளலாம். UNISOC T606 சிப்செட்,  UFS 2.2 ஸ்டோரேஜ் ஆகியவை மல்டிடாஸ்கிங் தங்கு தடை.யின்ற பெற உதவுகிறது. ஸ்டோரேஜ் ஆப்ஷன் 64GB/128GB என இருந்து வரும் நிலையில், 1TB வரை நீடித்து கொள்ளலாம். ட்ரிபிள் சிம் ஸ்லாட் வசதியும் இடம்பிடித்துள்ளது 

(4 / 5)

பெர்பார்மென்ஸை பொறுத்தவரை 8GB/4GB RAM  இன்பில்டாக கொண்டிருப்பதோடு, 16GB வரை RAM அம்சத்தை மேம்படுத்திகொள்ளலாம். UNISOC T606 சிப்செட்,  UFS 2.2 ஸ்டோரேஜ் ஆகியவை மல்டிடாஸ்கிங் தங்கு தடை.யின்ற பெற உதவுகிறது. ஸ்டோரேஜ் ஆப்ஷன் 64GB/128GB என இருந்து வரும் நிலையில், 1TB வரை நீடித்து கொள்ளலாம். ட்ரிபிள் சிம் ஸ்லாட் வசதியும் இடம்பிடித்துள்ளது (Flipkart)

இந்த போன் 5000mAh பேட்டரியுடன், 15W  சார்ஜரை கொண்டிருக்கிறது. IP52 நீர் விரட்டும் வடிவமைப்பு, AI மேம்பாடுகள் கொண்ட 16MP AI-இயங்கும் கேமரா அழகான புகைப்படங்களை பிடிக்க உதவுகிறது. டைம்லேப்ஸ், நைட் விஷன், போர்ட்ரெய்ட் மோட் மற்றும் லெவலர் ஆகியவை புகைப்பட அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக உள்ளன

(5 / 5)

இந்த போன் 5000mAh பேட்டரியுடன், 15W  சார்ஜரை கொண்டிருக்கிறது. IP52 நீர் விரட்டும் வடிவமைப்பு, AI மேம்பாடுகள் கொண்ட 16MP AI-இயங்கும் கேமரா அழகான புகைப்படங்களை பிடிக்க உதவுகிறது. டைம்லேப்ஸ், நைட் விஷன், போர்ட்ரெய்ட் மோட் மற்றும் லெவலர் ஆகியவை புகைப்பட அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக உள்ளன

மற்ற கேலரிக்கள்